*ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.*
*யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.*
*நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.*
*கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.*
*“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.*
*இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன.“உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது” என்று கத்தின.*
*ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.*
*கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.*
*“தற்கொலை முயற்சிடா தருதலை!”*
*எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.*
*எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.*
*அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.*
*“அவனுக்கு காது கேட்காது”.*
*நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும்.*
*வெற்றியை எட்ட நினைப்பவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.*
*நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது.*
*முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.
No comments:
Post a Comment