நம் கோர்ட்டுகளில் குபீர் குபீர் என்று என்னவெல்லாமோ நடக்கிறது.. எதுவெல்லாமோ பேசப்படுகின்றது. நீதிபதிகள் திடீர் திடீர் என்று இயற்கைக்கு விரோதமாக பொன் மொழிகளை உதிர்க்கிறார்கள்.
உச்சநீதிமன்ற சீஃப் ஜஸ்டிஸ் நம் நாட்டில் நாலரை கோடி வழ்க்குகள் தீர்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடந்தாலும்.. கோர்ட்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்..
மற்றுமொரு நீதிபதி பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட, பிஞ்சில் பழுத்த, தன் அசட்டுத்தனத்தால் ரகசிய டூல்கிட்டை அபத்தமாக வெளியிட்ட இடதுசாரி ஆதரவு கழிசடை க்ரெட்டா துன்பர்க் ஐ புகழ்ந்து பேசுகிறார்..
பம்பாய் உயர்நீதிமன்றத்தின் சீஃப் ஜஸ்டிஸ்.. பீமா கொரேகான் கலவரத்தின் காரணமாக ஜெயிலில் அடைக்கப்பட்டு பின் முதுமையின் காரணமாக இறந்து போன பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியைப் வானளாவிப் புகழ்கிறார்..
மொத்தமே 46 கோவிட் கேஸ் உள்ள உத்திர பிரதேசத்தில் நடக்க விருந்த ஹிந்துத் திருவிழாவை ஒரே நாளில் தானாக முன்வந்து நிறுத்துகிறது நீதிமன்றம். ஆனால்.. 14,000 பேருக்கு மேல் கோவிட் பாஸிடிவ் இருக்கும் கேரளத்தில் “ஈத்” நடப்பதற்காக எல்லா தளர்வுகளையும் அறிவித்த முதல்வரைப் பற்றி மூச்சு விடாமல் வேடிக்கைப் பார்க்கிறது அதே நீதிமன்றம்..
தற்போது கடைசியாக பிரைவேட் மருத்துவமனைகளைப் பற்றி குரூரமான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஒரு நீதிபதி..
இதோ இன்று தமிழகத்தில் “திமுகவின் தயவில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதி ஆனார்கள்” என்று கூறிய R S பாரதி என்கிற திமுக தலைவர் மேல் போடப்பட்ட வழக்கை.. கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
ஆக சட்டங்களும், தண்டனைகளும், தீர்ப்புகளும் கட்சிகளுக்கு ஏற்றபடி.. மாற்றம் செய்யப்படும் என்பது இந்திய அளவில் பரவலாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment