சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு பிரதோஷம் இருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் என்றும், புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கிறோம்.
சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.
புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசிக்க வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித்தர நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment