Tuesday, July 20, 2021

.'ஜெய் ஹிந்த்' சமாளிக்க சுதந்திர நினைவு தூண்.

 'ஜெய் ஹிந்த்' பிரச்னை தொடர்பாக அரசுக்கு நெருக்கடி எழுந்த நிலையில், அதை சமாளிப்பதற்கு சுதந்திர தின நினைவு துாண் மற்றும் வளைவு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஜூன் மாதம் உரையாற்றினார். தொடர்ந்து கவர்னர் உரை மீது விவாதம் நடந்தது.



கொங்கு நாடு



இதில் பேசிய எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 'கவர்னர் உரையின் இறுதியில், ஜெய் ஹிந்த் என்ற வாசகம் இடம்பெறவில்லை; இது, அரசின் பெரும் சாதனை' என கூறினார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க., அரசு இதை கண்டித்து, சபை குறிப்பில் இருந்து அந்த வாசகத்தை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மத்திய அரசும் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து கோவை உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்து, கொங்கு நாடு உருவாக்க இருப்பதாக தகவல் பரவியது. இது, மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்வர் ஸ்டாலின், 19ம் தேதி டில்லியில் சந்தித்தார்.சட்டசபை நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை, சட்டசபையில் திறந்து வைக்க வருமாறும் அழைப்பு விடுத்தார். இதேபோல, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில், சென்னை, காமராஜர் சாலையில் நினைவு துாண் அமைக்க உள்ளதாகவும், இதற்கு அடிக்கல் நாட்டவும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். இந்திய ஒற்றுமை தான் தி.மு.க., நிலைப்பாடு என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தும் நடவடிக்கையாக இது அமைந்தது.

இந்நிலையில், சென்னை, காமராஜர் சாலையில் 75வது சுதந்திர தின நினைவு துாண் மற்றும் வளைவு அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை, பொதுப்
பணித் துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். ஏற்கனவே, காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் அருகே, 1.33 கோடி ரூபாயில், சட்டசபை வைர விழா நினைவு வளைவு கட்டப்பட்டு, ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.


இடம் தேர்வு



பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் அருகே எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நினைவு வளைவு, 2.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இச்சாலையில், மதுர வாயல் - துறைமுகம் இடையிலான மேம்பாலச் சாலை வந்து இறங்கும் பகுதிக்காக, துாண்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, அதற்கு இடையூறு இல்லாமல், சுதந்திர தின நினைவு துாண் மற்றும் நினைவு வளைவு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...