இரத்த தானம் செய்வதால் நமது உடல் பாதிப்படையும், நாம் சோர்வாகி விடுவோம் என்று தான் நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அதனால் நமக்கு உள, உடல் ரீதியான நன்மைகளே ஏற்படுகின்றன என்பதை நாம் அறியாமலிருக்கிறோம்.
1) ஆத்ம திருப்தியும், மகிழ்வும்.
நாம் தானமாகக் கொடுக்கும் சிறிதளவான இரத்தத்தின் மூலமாக பிறந்த குழi;தைகள் முதல் முதியோர் வரை பலவிதமான நோய்களாலும் அவஸ்தைப்படுகின்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் பங்கு கொண்டோம் என்பதை அறிந்து கொண்டால் எம்மை அறியாமலேயே ஒரு வகையான ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதை அனுபவரீதியாகவே அறிந்து கொள்ளலாம்.

2) இலவச மருத்துவப் பரிசோதனை.
ஆரோக்கியமானவர்களிடமிருந்து மட்டுமே இரத்தம் பெற்றுக்கொள்ளப்படும். இரத்தம் பெறப்படுவதற்கு முன்னர் பலவிதமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட இரத்தம் கூட பலவிதமான பரிசோதனைகளுக்குட்படுத்தப்படும். இதன் காரணமாக ஏதாவது ஆரோக்கியமற்ற நிலமைகள் காணப்பட்டால், அவை பற்றி ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அவற்றிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்து விடும். இந்தப் பரிசோதனைகள் யாவும் முழுக்கவும் இலவசமாகவே கிடைக்கும். பூரண சுகதேகி 3 அல்லது 4 மாதங்களுக்கொரு தடவை இரத்த தானம் செய்யலாம்.

3) இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு.
சீரான கால இடைவெளியில் இரத்த தானம் செய்யப்படும் போது மிதமிஞ்சிய இரும்புச்சத்து வெளியாக்கப்படுகின்றது. ஏனெனில், மிதமிஞ்சிய இரும்புச்சத்து இளமையில் முதுமை, சடுதியான மாரடைப்பு மற்றும் மூளைச்செயலிழப்பு போன்றவற்றுக்குக் காரணமாகின்றது.

4) உடற்பருமனைக் குறைத்தல்.
ஒரு முறை இரத்த தானம் செய்யும் போது சுமார் 650 கிலோகலோரி மிதமிஞ்சிய சக்தி குறைவடைகின்றது. எனவே, கிரமமாக இரத்த தானம் செய்வதன் மூலம் மிதமிஞ்சிய உடற்பருமனைக் குறைக்கலாம்.

5) புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு.
உடலில் மிகவும் கூடுதலாக இரும்புச்சத்து காணப்பட்டால், அது புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகமாக்கும்.

6) இரத்த சுத்திகரிப்பு.
கிரமமாக இரத்த தானம் வழங்குவதன் மூலம் இரத்த சுத்திகரிப்பு சுயமாகவே இடம்பெறுகின்றது. இரத்தம் வழங்கி சுமார் 48 மணித்தியாலங்களுக்குள் இரத்தத்தின் அளவு வழமை நிலையை அடைந்து விடுகிறது.

' இரத்தத்தை தானமாக்கி வெற்றி வீரனாவோம் '
No comments:
Post a Comment