கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றார்: இந்திராணி முகர்ஜி பரபரப்பு வாக்குமூலம்
கடந்த 2007-ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. அதற்காக சில ஆதாயங்களை அவர் பெற்றதாகவும் புகார்கள் உள்ளன.
இந்நிலையில், , ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு தங்களிடம் கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றதாக சிபிஐ விசாரணையில் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். எனவே இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment