ஒரு பெரியவர் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
எதிரே வந்த ஒரு நாத்தீகர், ''என்ன ஐயா நீங்கள் கடவுளைக் கும்பிடுபவர் என்று காட்டிக்கொள்ள இந்த வெள்ளைப் பட்டை விளம்பரம் தேவையா ??'' என்றார்.
பெரியவர் சொன்னார்,
"அய்யா !! இந்த விளம்பரம் விலையற்ற வெறும் சாம்பல், ஆனால் .நீங்கள் பகுத்தறிவாளர் எனக் காட்டிக்கொள்ள, செலவு செய்து வாங்கி போட்டுக்கொண்டு திரியும் கருப்புச் சட்டை எனும் விளம்பரம் தேவையா ???"
இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து உன்னுள்ளும் என்னுள்ளும் நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை கடவுள்.
மேலும் திருநீறு (சாம்பல்) நாளை நீ சாம்பலாகப் போகிறாய் என்ற உண்மையை எப்பொழுதும் உணர்த்திப் பேராசைகளை அழித்து; அன்பு, கருணை, ஞானம் போன்ற உயர் நிலைக்கே அவை அழைத்துச் செல்லும்.
No comments:
Post a Comment