தற்காலத்தில் பலர் தங்களை தாங்களே குரு என்று கூறிக்கொள்கிறார்கள்.இவர்களில் உண்மையான குரு யார்? போலியான குரு யார்? என்று கண்டு பிடிப்பது எப்படி?
சுவாமிஜி….குருவை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. பலபேர் செருக்கின் காரணமாக,தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.அத்துடன் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் நினைக்கிறார்கள். குருடன் குடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழவேண்டிவரும்.இத்தகைய குரு உலகில் ஏராளம் ஏராளம்.
அப்படியானால் உண்மையான குருவை எப்படி கண்டுபிடிப்பது?
1.முதலாவதாக சூரியனைக்காண விளக்கு தேவையில்லை,அதன் ஒளியிலேயே அதை அறியலாம்.அதுபோல உண்மையான குரு வரும் போது,அவர் உண்மையானவர்தான் என்பதை நம் மனம் தானாக உணர்ந்துகொள்ளும்.
2.குரு முற்றிலும் தூய்மையானவராக இருப்பார். தூய்மையற்றவன் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.
3.குரு சாஸ்திரங்களின் உட்கருத்தை அறிந்திருப்பார். வேதம்,குரான்,பைபில் எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமே,மதத்தை பொறுத்த வரை அவை வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே.வார்த்தைகளில் தங்கள் மனத்தை இழந்துவிட்டவர்கள் அதன் உட்பொருளை காண தவறிவிடுகிறார்கள்
.4.குரு பாவம் அற்றவராக இருக்க வேண்டும். தூய்மையற்ற ஒருவரிடம் ஆன்ம ஒளி இருக்காது.எதை போதிக்கிறாரோ அதைப்பற்றி அவருக்கே தெரியாது.
5.முதலில் குரு எத்தகையவர் என்று பார்க்க வேண்டும்,அதன் பிறகே அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்.
6.அவரிடம் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.அவர் பெயர்,புகழ்,பணம் இவற்றிற்காக உங்களுக்கு போதிக்கிறாரா அல்லது அன்பினால் தூண்டப்பட்டு போதிக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.
7.குரு சுதந்திரமானவராக யாருக்கும் அடிமையில்லாதவராக,இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்பவராக இருப்பார்
8. முக்கியமானது அவர் கடவுளை அறிந்தவரா என்பதை பார்க்க வேண்டும்.இல்லாவிட்டார் அவரிடமிருந்து கற்பது ஆபத்தானது.
யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
No comments:
Post a Comment