சரித்திர நாயகர் – உலகமே வியந்து பாராட்டிய இந்தியாவின் தன்னிகரற்ற பொருளாதார மாமேதை
சரித்திர நாயகர் – உலகமே வியந்து பாராட்டிய இந்தியாவின் தன்னிகரற்ற பொருளாதார மாமேதை
நமது இந்தியாவில் மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது
நாமறிந்த உண்மைதான். இத்தகைய மக்கள் தொகை மிகுந்த நமது இந்திய திருநா ட்டில் வாழும் இந்த தன்னிகரற்ற சரித்திர நாயகரைக் கண்டு உலகமே வியந்து ஆச்சரியத்தில் பாராட்டியுள்ளது
2009 களில் திடீரென ஜெர்மனி (Germany), ஸ்பெயின் (Spain), அமெரிக்கா (America), இங்கிலாந்து (England) மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் (Banks in Foreign Countries) எல்லாம் திவாலாகியது.
சீனாவில் உணவு பற்றாக்குறை (Food demand in China) ஏற்பட்டது. உலகமே பொருளாதார தேக்க நிலை (Economic Stagnation) யால் ஸ்தம்பித்து நின்றது.
உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர்.
உலகின் பல துறைமுகங்கள் (Harbors) எரிவாயு (Gas) தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.
சரக்கு கப்பல்கள் (Goods Ships) நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. கச்சா எண்ணெய் (Crude Oil) விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது.
பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடை யில் போர் பதற்றங்கள் வேறு.
இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா (America), ரஷ்யா(Ruishia)வின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின.
இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது.
மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் (Project) வராததால் தங்கள் ஊழியர்களை Layoff செய்தது. வேறு யாரும் வேலை இழக்கவில்லை.
உணவு தட்டுப்பாடு (Food Demand) என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்க ள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல.
இதற்கிடையில் ஊரக மேம்பாட்டுக்காக வாஜ்பாய் (Vajbayee) ஆட்சியில் உலக வங்கியில் வாங்கிய கடனும் அடைக்கப்படது.
இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்.
பொருளாதார தேக்கநிலை(Economic Stagnation)யை சமாளிக்க IMF நடத்திய கல ந்தாய்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் (Indian Prime Minister) அழைக்க ப்பட்டார். ஆம்! உலகமே வியந்த அந்த தன்னிகரற்ற பொருளாதார மாமேதை முன்னாள் பிரதமர் Dr. மன்மோகன் சிங் (Former Prime Minister Dr. Manmohan Singh) என்று ஒவ்வொரு இந்தியனும் மார்தட்டி பெருமை கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment