சிவன் கோவில்களிலோ விஷ்ணு கோவில்களிலோ யாரும் அக்னி குண்டம் இறங்குவதில்லை - மாரியம்மன் கோவிலிலும் மற்ற சக்தி கோவில்களிலும் அக்னி குண்டம் இறங்குகின்றார்கள்…! விளக்கம்
மாரியம்மன் பண்டிகையை இன்று எப்படிக் கொண்டாடுகின்றோம்….? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
பண்பு கொண்ட உணர்வுகளை வளர்ப்பதற்கு மாறாக பல அசிங்கமான பாடல்களைப் பாடுவதும் கரகாட்டம் என்ற பெயரில் டப்பாங்குத்து ஆட்டங்களும் பண்பை இழந்த நிலைகளில் செயல்படுகின்றார்கள்.
ஆர்வத்தில் ஏற்படும் உணர்வுகள் இந்தத் தவறின் உணர்வுகள் இசையாக்கி ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கும் இப்படி ஒரு நிலை.
நம்மை அறியாது ஒரு வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. வேதனைப்படும் செயல்களையே தான் நாம் செயல்படுகின்றோம்.
வேதனைப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்து கொள்கின்றோம். அவர்களைக் காக்கவும் செய்கின்றோம். அந்த வேதனை உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…!
மாரியம்மன் கோவிலில் என்ன செய்கின்றார்கள்…? “தீ மிதிக்கின்றார்கள்…!” அப்படி என்றால் என்ன அர்த்தம்..?
ஊருக்குள் பகைமை வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...? நம்மை அறியாமல் வரும் தீமைகளை எப்படி மாற்றுவது…?
தீமையான உணர்வை எப்பொழுது பார்க்கின்றோமோ “ஈஸ்வரா….!” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்தி இந்தக் குண்டத்தில் இறங்க வேண்டும்.
இப்படிச் “சுட்டுப் பொசுக்க வேண்டும்” என்று ஞானிகள் சொல்கிறார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும் ஊர் முழுவதும் படரவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அங்கே கோவிலில் எல்லோரும் எண்ண வேண்டும்.
1.எங்கள் வாழ்க்கையில் எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.அருள் சக்திகள் பெருக வேண்டும்
3.அரவணைக்கும் பண்புகள் வரவேண்டும்
4.எங்களை அறியாது இயக்கும் பகைமை உணர்வுகள் நீங்கி
5.அருள் உணர்வைப் பெறும் தகுதி எங்கள் ஊர் மக்கள் அனைவரும் பெறவேண்டும்.
6.அன்பு கலந்த நிலைகள் பரவ வேண்டும் என்று
7.அன்றைக்கு எல்லோரும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.
8.அப்பொழுது பகைமை என்ற நிலைகளை நீக்குகின்றோம்.

சக்தி கோவில்களில் அனைத்திலும் அக்னி குண்டம் இறங்குவார்கள். சிவன் கோவிலில் இறங்குகின்றார்களா…? விஷ்ணு கோவிலில் இறங்குகின்றார்களா…?
இல்லை…! காரணம் என்ன…?
1.தீமையான உணர்வுகள் வரும் பொழுது
2.அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அங்கே சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
3.இதை உருவமாக்கி அருவத்தின் சக்தியை எப்படிப் பெறவேண்டும் என்று காட்டியிருக்கின்றார்கள்.
2.அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அங்கே சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
3.இதை உருவமாக்கி அருவத்தின் சக்தியை எப்படிப் பெறவேண்டும் என்று காட்டியிருக்கின்றார்கள்.
அதை யாருமே செய்வதில்லை.
இன்று இதைச் சொன்னோம் என்றால் நான் ஏதோ புதிதாகச் சொல்வதாக நினைக்கின்றார்கள். அன்று இதையெல்லாம் ஞானிகள் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.
No comments:
Post a Comment