அம்பாள் சன்னிதியில் மாலையோடும் மஞ்சள் துண்டோடும் ஸ்டாலின் மெய்மறந்து வேண்டுதல் செய்கிறார்..! ஆனால் வெளியே நாத்திக வேஷம் போடுகிறார்..!
பாவம் ஸ்டாலின்... மனைவியை அடக்க முடியவில்லையா.. இல்லை இவரே தன் பாவத்தைத் தொலைக்க கோவில் கோவிலாக மனைவியை அனுப்பி வைக்கிறாரா என்று தெரியவில்லை.
ராசாத்தி அம்மாள் எப்பவும் பூக்குடலையோடுதான் காட்சி தருகிறார். இல்லையா ஏதாவது ஒரு ஐயரிடம் தன் குலம் கோத்திரங்களை ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்..!
ரத்னகிரீஸ்வரர் கோவிலிலிருந்து பிரஸாதம் சிஐடி காலணிக்கு முக்கிய சிவபூஜை நாட்களில் கருணாநிதி ஐயா சாப்பிட வருவதற்கு முன்பாக அனுப்பப்பட்டதாக அதன் அறங்காவலர் கூறியுள்ளார்..!
கருணாநிதி தன் அறைக்கே திருப்பதியிலிருந்து புரோகிதர்களை அழைத்து வராஹகத்யம் பாட வைக்கிறார்...!
கிறிஸ்தவரான லியோனி திருநள்ளாரு சனீஸ்வரன் கோவிலின் நெற்றிப் பட்டையோடு பயபக்தியாக நிற்கிறார்..!
ஸ்டாலின் மகன் உதயநிதி தன் காருக்கு ஆயுத பூஜை செய்கிறான். பழனியில் தங்கத் தேர் இழுக்கிறான்...!
திருப்பதியில் நுனிப் பூ என்று தலைமுடி காணிக்கைக்காக நுனி முடியைத் துறக்க வரிசையில் நிற்கிரார் கனிமொழி...!
ஆற்காடு வீராசாமி திருக்கடையூரில் 70 அல்லது 80 செய்து கொண்டு தீர்க்க ஆயுளுக்கு பரிவட்டத்தோடு நிற்கிறார்...!
திருப்பூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஐயர் சகிதமாக பொங்கல் பண்டிகை நடக்கிறது..!
திமுகவில் ஒருவருக்குக் கூட ஹிந்து கடவுளைத் தவறாகப் பேசும் யோக்யதை கிடையாது. இவர்கள் உண்மையில் இஸ்லாமிய கிறிஸதவர்களை அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவதாக நாடகமாடி ஏமாற்றுகிறார்கள். இவர்களை ஹிந்து கடவுள்கள் இல்லை எந்த கடவுளும் மன்னிக்கப் போவதில்லை.
இவர்கள் அனைவரோடும் ஒப்பிடும் போது நிச்சயமாக கே.என்.நேரு உயர்ந்தவரே..!
மற்றவர்கள் அனைவரும் உள்ளே ஒரு வேஷமும் வெளியே குங்குமத்தைக் கலைத்துவிட்டு வரட்டு நாத்திகமும் பேசிவருபவர்கள். ஆனால் மனம் திருந்தி தைரியமாக ஒரு பெருமாள் கோவில் கட்டுமளவில் ஆத்திகராக மாறி கேவலமாக வேஷம் போடாமல் வெளியே வந்த கே.என்.நேருவின் பக்தி நிச்சயம் உயர்ந்தது.
No comments:
Post a Comment