பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு போன்ற சத்துக்கள் உள்ளது. தினமும் இரவில் பனிரெண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை அரைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தும்.
👉 அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். இதனை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகளை உண்டாக்கும்.
மூளையை பலப்படுத்தும் :
👉 வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளம் வயதிலிருந்தே சாப்பிட்டுப் பழக வேண்டும்.
நரம்பு தளர்ச்சி :
👉 பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.
சரும ஆரோக்கியம் :
👉 பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
எடை குறைய :
👉 பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.
இரத்த அழுத்தம் :
👉 பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் :
👉 நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.
சீரான இரத்த ஓட்டம் :
👉 மக்னீசியம் பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.
நீரிழிவு :
👉 பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment