அயோடின் (#Iodine) – குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் ஆயுள் காலத்துக்கும் அடித்தளம் – மறுக்க இயலா உண்மை
அயோடின் (#Iodine) – குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் ஆயுள் காலத்துக்கும் அடித்தளம் – மறுக்க இயலா உண்மை
நாம் உண்ணும் உணவு ஆரோக்கயமாக (#Healthy #Food) இருக்க வேண்டும் குறிப்பாக
உணவில் அயோடின் (#Iodine) சத்து குறைந்தால் அது நரம்பு களைப் பாதிக்கும், உளவியல் (#Psychological) ரீதியிலான வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே, கருவுறும் (#Pregnancy) தாய்மார்களும் கர்ப்பிணிகளும் உணவில் அயோடினைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் (#Scientist) வலியுறுத்துகின்றனர். அயோடின் சத்துக்குறை வால் ஆண்டுதோறும் 1.9கோடிக் குழந்தைகள் (Babies- Baby ) 14%மூளை (Brain) வளர்ச்சி குறைவால் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கக்கூடிய குறைபாடே என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அயோடின் ( #Iodine) குறைவால் குழந்தைகளின் அறிவுத்திறன் (ஐ க்யூ- IQ) 8 முதல் 10 புள்ளிகள்வரை குறையவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
1990 முதலே உலக அளவில் அயோடின் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்ச்சி (#Awareness) ஊட்டப்பட்டுவரு கிறது. சாப்பாட்டு உப்பில் அயோடினைக் கலப்பதைக் கட்டாயமாக்கிச் சில வளரும் நாடுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், கடந்த வாரம் கிடைத்த ஆய்வு முடிவுகள் இதில் மேலும் முயற்சிகள் எடுக்க ப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. ஐ.நா (UN) சபை யின் குழந்தைகள் நலனுக்கான ‘யுனிசெஃப்’ முகமையும், மே ம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்கான உலகக்கூட்டணி (கெயின் -Gain) அமைப்பும் இணைந்து கடந்த பத்தாண்டுகளாக அயோடின் (#Iodine) சத்துக்குறைவைப் போக்க இணைந்து செயல்படுகின்றன. அயோடின் (#Iodine) சேர்க்கப்பட்ட உப்பை உட்கொண்ட பிறகு 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள வெற்றிகரமான மாற்றங்கள் குறித்து சார்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகாலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும் உணவில் உள்ள அயோடின் (#Iodine) அளவைப் பொறுத்தே அதன் உடல், மூளை (#Body and #Brain) வளர்ச்சி அமைகிறது. குழந்தை கருவுறும் நாள் தொடங்கி 2 வயது ஆகும் வரை யில் அதாவது சுமார் 1,000 நாட்களுக்கு உட்கொள்ளும் சத்தான உணவுதான் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி , நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன. நல்ல சத்துள்ள உணவை உண்ணும் குழந்தைகளால் விரைவாகப் பேச, செயல்பட, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அப்போ து கிடைக்கும் மூளை வளர்ச்சி குழந்தையின் ஆயுள் கால த்துக்கும் அடித்தள மாகிறது.
அயோடின் (#Iodine)பற்றாக்குறையால் வளர்ச்சி குறைவு என்பது ஏழை நாடுகளில், பின்தங்கியுள்ள சமூகங்களில் மட்டும் ஏற்படுவதல்ல. வளர்ந்தநாடுகளில் பெரிய பணக்காரக் குடும்பங்களின் பி ள்ளைகள்கூட மூளை வளர்ச்சியில்லாமல் இருக்கின்றனர்.
நிலத்திலும் நீரிலும் கலந்திருக்கும் அயோடின் (#Iodine) உல கின் எல்லா பகுதிகளிலும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை . ஒரு நாட்டின் புவியமைப்பியலும் இதைத் தீர்மானிக்கிறது. அதற்கேற்ப உணவு சங்கிலியில் அயோடின் (#Iodine) சேர்கிறது. ஆனால், பெரும்பாலும் உப்புடன் சிறிது அயோடினை சேர்த்து உண்ணும் நிலை தான் நிலவுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் 5 கிராம் அளவு மட்டுமே உப்பு சேர்த்துக்கொ ள்ளலாம். அந்த உப்பு (#Salt) அனைத்துமே அயோடின் கலந்ததா க இருத்தல் அவசியம். அயோடின் கலந்த உப்பு இப்போது உல கின் 86% வீடுகளால் உண்ணப்படுகிறது. பிஸ்கெட் (#Biscuit), ரொட்டி (#Bread), ஊறுகாய் (#Pickle), இதர தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இப்போது அயோடின் (#Iodine) கலந்த உப்பைத்தான் கையாள்கின்றன. சிறிய அளவில் உப்பு தயாரிப்பவர்களைக் கொண்டுள்ள நாடுகளில்தான் இது குறைவாக இருக்கி றது.
புரூண்டி, மாலி, மடகாஸ்கர், மொசாம்பிக், தெற்கு சூடான், சூடான் ஆகிய நாடுகளில் அயோடின் (#Iodine)பற்றாக்குறை (#Deficiency) அதிகம். தெற்காசியாவில் பரவா யில்லை. சில ஐரோப்பிய நாடுகள் #countries) உ ட்பட மொத்தம் 20 நாடுகளில் அயோடின் பற்றாக்குறை (#IodineDeficiency) இப்போதும் நிலவுகிறது. பிரிட்டனிலேயே கர்ப்பிணிகளுக்கு (Pregnant Lady) அயோடின் குறைவு காணப்படுகிறது.
அயோடின் கலந்த உணவில் முதலிடம் பெறுவது பால். ஆனால், பிரிட்டன் (#Britain) உட்பட பல நாடுகளில் மக்கள் இப்போது பால் அருந்துவதை நிறுத்தி வருகிறார்கள். புன்செய் தானியங்கள், முட்டை (#Egg), கடல்வாழ் பிராணி களாலான உணவு ஆகியவற்றில் வெவ்வேறு அளவில் அயோடின் இருக்கிறது. குழந்தைகளுக்கான ஊட்டச் சத்துணவில் அயோடின் (#Iodine) கலந்த உப்பையும் இனி சேர்க்க வேண்டும்.
உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதையும் குறைக்க நடவடிக்கை எடு க்க வேண்டும் ஏழைகள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினரிடத்தில் அயோடின் (#Iodine) பற்றாக்குறை (#Deficiency) இருக்கிறதா என்று தொடர்ந்து பரிசோதிக்கவேண்டும். உப்பில் அயோடினை சேர்ப்பதை க் கட்டாயமாக்கும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்றும் கண்கா ணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment