================================
கேட்ட முதல் விநாடியிலிருந்தே என்னை ஆக்கிரமித்துவிட்ட பாடல், அறுவடை நாள் திரைப்படத்தின் “தேவனின் கோயில்” பாடல். கேட்ட மாத்திரத்தில் புல்லரித்தது இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. இந்திய ஸ்லோக வரிகளை, மேற்கத்திய செவ்வியல் ஸ்டைலில் அமைத்துப் பாடிய அந்த இசைக்கோர்வை மனதையும், உடலையும் என்னவோ செய்தது. அத்துவக்கத்தைத் தவிரவும், அப்பாடல் இயல்பிலே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் பொதுவாக மகிழ்வுப்பாடல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒலி அளவை (Scale), தாளத்திலும் அப்பாடல் அமைக்கப்பட்டிருந்தாலும் பாடலின் மெலடி, வரிகள், இசைக்கோர்வை எல்லாம் சேர்ந்து ஏனோ ஆழ்ந்த சோகத்தைக் கொடுத்தது.

“இளையராஜாவின் பாஸ்கிடார் தனித்துவம் வாய்ந்தது” என்று சொல்வது ரொம்பவும் ‘அடக்கிவாசித்துச்’ சொல்லப்படுவதாக அமையும். பாடல்களில் கேட்பதற்கு கனமான ஒரு செவிநிறை(fill effect) கேட்கும் அனுபவத்திற்கு திரையிசையில் பாஸ்கிடார் பயன்படுத்தப்படும். அப்படி உபயோகப்படுத்தப்பட்ட பாஸ் கிடார் கோர்வைகளும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய வடிவங்களில் அடங்கிவிடும். அதை மாற்றி, பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா.
இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.
பூவே இளையபூவே பாடலின் ஆரம்பத்தில் ‘காமாட்சி… இந்தத் தோட்டத்துல இருக்கற பூவையெல்லாம் பார்க்கும்போது எனக்கு உன் ஞாபமாகவே இருக்கு’ என்று மலேஷியா வாசுதேவன் பேசும்போது பின்னணியில் உற்றுக் கேட்டுப் பாருங்கள், அங்கே பாஸ்கிடார். ‘அட மச்சமுள்ள மச்சான்’ பாடலின் இண்டர்லூடில் வரும் ஒரு சிறு ட்ரம்ஸ் வாசிப்பின் பின்னணியில் அதை அப்படியே திருப்பி வாசித்திருக்கும்…
எண்பதுகளின் தொடக்கத்தில் பல பாடல்களின் வெற்றிக்கு பாஸ் கிடாரின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். இளையநிலா, நீதானே எந்தன் பொன் வசந்தம் போன்ற அன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப வந்த அனைத்து பாடல்களிலும் இந்த வாத்தியம் கோலோச்சியது. ராஜாவின் பெரும்பாலான பாடல்களில் சரணங்களின் நீண்ட ஸ்வரங்களில் உள்ள வெற்றிடத்தை பாஸ் கிடாரின் நளினமான grooveகள் நிரப்பும்.
திரும்ப ‘தேவனின் கோயில் மூடிய நேரம்…’ பாடலுக்கு வருவோம், இப்பாடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது பாஸ் கிடார். இப்பாடலின் மெலடி, பாஸ் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தி வெளியே வரும்போதுதான் அது முழுமையானதொன்றாக, இளையராஜாவால் மட்டுமே செய்யக்கூடிய சாதனைகளில் ஒன்றாக மாறுகிறது.
No comments:
Post a Comment