Monday, August 6, 2018

இது கதை அல்ல நிஜம்.

பாகனேரி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தற்போதும் அதிமுகவில் இருக்கிறார் ;
ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால் எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார். எம்ஜியாரை எதிர்த்து கடுமையாக பொது கூட்ட மேடைகளில் விமர்சிப்பார் ;
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை அடித்து தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாண செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு , நான் கல்யாணத்துக்கு வந்தா வரவேற்ப்பு,க ட்சிக்காரனுக்கு சாப்பாடு அது-இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும். நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி என தனது நரி சிரிப்பை உதிர்த்து விட்டு இருக்கிறார். .
உடைந்து போனார் அந்த சிவகங்கை திமுக காரர் ; தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்ச கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... புரட்சி தலைவரை பாப்போம் " என இழுத்திருக்கிறார்.
சிவகங்ககாரருக்கோ எம்ஜியாரை வச்சு
நாடகம் போட்ட காலத்துல பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தொடர்பு விட்டு போச்சு ; அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும் என தயங்கியிருக்கிறார்.
நீ வா மாமா... தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.. என தைரியம் சொல்லி அழைத்து சென்றார். முதல்வர் எம்ஜியாரை வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர். காரை நிறுத்தி அருகில் அழைத்து இங்கேயே இருந்து சாப்பிட்டு வெய்ட் பண்ணுங்க ; கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன் என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில் ஒரு குட்டித்தூக்கம். தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று சாப்பிட்டீங்களா எனக்கேட்டு , என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார். புரட்சி தலைவர் ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு... தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து கொடுத்து விட்டு , அந்த கட்சியிலேயே இரு... நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் பொன்மனச்செம்மல் .
ஊருக்கு வந்த சிவகங்கை காரரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிலும் சேராமல் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்தும் போய் விட்டார்.
சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத இந்த கோபாலபுரத்து கோயபல்ஸ் தமிழினத்திற்காக ரத்தம் சிந்துவேன் என்று புழுகு மூட்டையை இன்னமும் அசராமல் அவிழ்த்து விடுகிறார்...
புரட்சி தலைவர் மணக்கும் சந்தனம்.
கருணாநிதி நாற்றமடிக்கும் சாக்கடை
என்பதற்கு இந்த உதாரணமே போதும் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...