Sunday, August 5, 2018

இந்த அளவிற்கு விமர்சனமே அதிகம் தான். இவரை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தாலே நமக்கு விமோசனம்.

சர்வாதிகாரியாக இருந்தால் என்ன நடக்குமென்று, இந்த மாநிலத்தை ஆண்டவரே உதாரணம்.
பிக் பாஸில் கமலஹாசன்.
உங்களுக்கு இந்ததுணிவு அவர் இறந்த பின்னர் தான் வருமா...அன்று அவர் உயிருடன் இருக்கும் வரை ...பேசா மடந்தையாக இருந்து விட்டு இன்று ஒரு டிவி மேடை கிடைத்தவுடன் அவரை தாழ்த்தி பேசுவது அசிங்கமல்லவா?. இப்படி பேசினால் ஓட்டு கிடைக்கும் என்று நீங்கள் போடும் கணக்கு ...நீங்கள் எடுத்த படங்களில் ... சில படங்கள் நல்லபடமாக இருந்தும்.... ஒரு சில தவறான உங்கள் கணக்கால் ஓடாத படமாக ஆகி சுருண்டதை உங்கள் ரசிகனாக நான் அறிவேன் அதே மாதிரி இதுவும் ஆகிவிடபோகிறது ஜாக்கிரதை...
இறந்தவர்களை விமர்சனம் செய்வதை எம்மக்கள் ஏற்க மாட்டார்கள்... அவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் கூட...ஆனால் மஹராசி என பெயர் வாங்கி செத்தவரை விமர்சனம் செய்தால் அது உங்கள் லாப கணக்கில் சேர வாய்பில்லை...இதை நீங்கள் உணர வேண்டும்...இன்று நடக்கும் வெட்டி போராட்டங்கள் அவர் காலத்தில் ஏன் நடக்கவில்லை .. இதிலிருந்தே தெரியவில்லை... அவரின் நிர்வாக திறமை...
நீங்கள்...உங்கள் கட்சியை வளர்கிறேன் என ஆபத்தான விஷங்களை தொடாதீர்கள் ... அது உங்களை விடாது துரத்த ஆரம்பித்துவிடும் ... பிறகு உங்கள் அரசியல் ஆசான் கெஜ்ரிவால் மாதிரி மன்னிப்பு லெட்டர் பேடு அடித்துவைத்து கொண்டு வாராவாரம் ஆரவரமாக மன்னிப்பு கடிதங்களில் கையேழுத்து போட்டு கொண்டிருப்பதே வேலையாகிவிடும்...
சினிமாவில் கதநாயகனாக மின்னிய நீங்கள் அரசியலில் காமெடியனாகிவிட கூடாது என்ற நல்லெண்ணத்தில்... என்றும் உங்கள் சினிமாரசிகன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...