Thursday, August 2, 2018

கருணாநிதி #டாக்டர்_கருணாநிதி ஆனது எப்படி?

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ #டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது! அந்தகாலத்தில் ஒழுங்கா படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது நடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?
ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள்! காரணம் அவர் அப்போதைய #முதல்வர். இதற்கான அறிவிப்பு வெளியானதும் பல்கலைக்கழகத்தில் இருந்த #மாணவ_காங்கிரஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம்? என்பது மாணவர் காங்கிரஸ் அமைப்பின் கோஷம்.
இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது. அந்த மாணவர்கள் ஆர்வ கோளாறுடன் கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள். இது மட்டுமின்றி பல்கலை கழக மதில் சுவற்றிலும் கழுதை படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்.
இது கருணாநிதி கவனத்திற்கு வந்தும் கண்டு கொள்ளாது, #சூடுசுரனையின்றி மாணவர்களின் எதிர்ப்பினை மீறி போலீஸ் படை பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்!
சாதாரண கருணாநிதியாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் நுழைந்த கருணாநிதி #டாக்டர் கருணாநிதியாக புதிய பெயருடன் புறப்பட்டு விட்டார். போகும் பொழுது காவல் துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள் என்று உத்திரவிட்டார்.
அதற்கு பிறகு மாலை மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். பல மாணவர்களுக்கு மண்டை, கை, கால்கள் உடைந்தது! மாணவர்களுக்கும் போலீஸ் அடிக்கும் காரணம் முதலில் புரியாவிட்டாலும்,, ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா? என்று அடியோடு விழுந்த வார்த்தைகள் ஆஹா இது கருணாநிதியின் கைங்கரியம் தான் என்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.
அதை விட பெரிய கொடுமை மறுநாள் பல்கலை கழக குளத்தில் மிதந்து கிடந்த சக மாணவன் #உதயகுமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள் உறைந்து நின்றார்கள்! போலீஸ் தான் உதயகுமாரை அடித்து குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட ஆரம்பித்தார்கள்.
கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் அப்பா #பெருமாள்சாமியோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டார்! இப்படிக்கும் அவரும் ஒரு வாத்தியார். பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் கருணாநிதியின் ஏவளர்கள் அவரை என்ன பாடு படுத்தி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள்.
காவல்துறையயோ இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது!
இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலையில் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் படை மாலை வரை பல்கலைகழக வளாகத்தில் இருந்தது ஏன்? திடீரென போலீஸ் மாணவர்கள் விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள் என்று விசாரணை கமிஷன் கேட்டார்கள் மாணவர்கள்.
கருணாநிதியோ சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட உதயகுமார் படுகொலை பற்றிய பிரச்சனையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் என்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும் இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் பொய்யை கூறிக்கொண்டே இருந்தார்.
எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் #என்_எஸ்_ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடைசியில் விசாரணையின் முடிவில் குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்துக்கும் போலீஸ்தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறி கருணாநிதிக்கு பரிசுத்த சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை!
இது நடந்து முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகு பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது. அதில் முந்தைய கருணாநிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் #எம்ஜியார் அவர்களிடம் உதவி கேட்டு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதம் அப்பொழுது பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.
அந்த கடிதத்தில் உதயகுமாரின் தம்பி என்ன எழுதியிருந்தார்?
கடிதம்:-
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கொலையுண்ட உதயகுமாரின் தம்பி #கே_பி_மனோகரன் எழுதிக் கொண்டது.
எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல்லச் செய்து தீராத பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத்தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.
இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் முதல்வர்#கருணாநிதி அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்து இருந்தார்கள். வீடு கொடுப்பதாக கூறினார்கள். வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டுமெனச் என் தந்தையை மிரட்டி பயமுறுத்தி சொல்லச் செய்தார்கள். எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார்கள். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால் நாங்கள் இதுவரை எந்தவித உதவியும் பெறவில்லை! என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ அநாதை பிணம் என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல் என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.
நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசாங்கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம்பெனியில் உத்தியோகமோ வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத் திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக் கின்றோம்.
தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்படிக்கு..
கே.பி.மனோகரன்.
______________________________
மனோகரன் குடும்பம் மாதிரி எத்தனையோ பேர் கருணாநிதியாலும் திமுகவாலும் அழிந்து போய் இருக்கிறார்கள்!
அவர்கள் எல்லாம் கருணாநிதியை அவர் இதேபோல் #புழுப்பூத்து, சுயநினைவின்றி, படுக்கையிலேயே மலஜலம் கழித்து நூறு ஆண்டுகள் வாழட்டும் என்று வாழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள்! நாமும் அவர்களோடு சேர்ந்து நூறு வருஷம் கருனாநிதி வாழட்டும் என்று வாழ்த்துவோம்......
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...