Thursday, August 2, 2018

"ஏற்று கொள்ளும் தன்மை"

ஒருவர் ஏதோ ஒரு காரியத்தை எனக்கு விருப்பமில்லாத வழியில் செய்வதை
என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனும்போது நான் கோபப்படுகிறேன்.
அதேசமயம்,
ஒருவர் ஏதோ ஒரு காரியத்தை எனக்கு விருப்பமில்லாத வழியில் செய்தாலும்,
அதை
என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்போது நான் அதைப் பொறுத்துக்கொள்கிறேன்.
என்னிடம் இல்லாத ஒன்றை ஒருவர் வைத்திருக்கிறார்
அல்லது
என்னால் ஏற்படுத்த முடியாத விளைவுகளை ஒருவரால் ஏற்படுத்த முடிகிறது.
ஆனால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று வரும்போது
நான் பொறாமைப்படுகிறேன்.
அதேசமயம் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தால் நான் உத்வேகம் பெறுகிறேன்.
நிச்சயமற்ற நிலையை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதை நான் எவ்வாறு சமாளிக்கப் போகிறேன் என்பது குறித்து நான் உறுதியின்றி இருந்து,
அதை
என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதபோது,
அது எனக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் அதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்போது அது எனக்குள் துணிச்சலை ஏற்படுத்துகிறது.
என்னை உணர்ச்சிரீதியாகக் காயப்படுத்திய ஏதோ ஒன்றை ஒருவர் செய்ததை
என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதபோது,
அது எனக்குள் பகைமை உணர்வை உண்டாக்குகிறது.
அந்த விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள
முடியும்போது,
அவர்களை மன்னிப்பதற்கு அது எனக்கு உதவுகிறது.
என் கண்முன் இல்லாத ஒருவர் என் நினைவில் குடிகொண்டிருக்கிறார்,
ஆனால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதபோது என்ற நிலையில்,
"நீங்கள் என்னுடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் "என்று நான் கூறுகிறேன்.
ஆனால் அதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில்,
"நான் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன் "என்று கூறுகிறேன்.
உணர்ச்சிச் சமன்பாடு மிகவும் எளிதான ஒன்று.
ஏதோ ஒன்று +ஏற்றுக் கொள்ளுதல் - நேர்மறையான உணர்ச்சி.
ஏதோ ஒன்று+ மறுத்தல் - எதிர்மறையான உணர்ச்சி.
எனவே, "யாரோ ஒருவர்" அல்லது "ஏதோஒன்று " என்னை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உணரச் செய்வதில்லை.
ஏதோ ஒன்றை அல்லது யாரோ ஒருவரை நான் "ஏற்றுக் கொள்வதும் " அல்லது "ஏற்றுக்கொள்ளாததும் " தான்
என்னை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உணரச் செய்கிறது. என் உணர்ச்சிகளின் தரத்தைத் தீர்மானிப்பது இந்த உலகம் அல்ல.
மாறாக,
உலகிற்கு நான் அளிக்கும் செயல்விடையின் (ஏற்றுக் கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ள மறுத்தல்) தரம்தான் அதைத் தீர்மானிக்கிறது.
அடுத்த முறை ஏதோ ஓர் எதிர்மறையான உணர்ச்சியால் நான் சலனப்படும்போது,
யாரால் அல்லது எதனால் நான் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளேன் என்று கேட்காமல்,
யாரை அல்லது எதைத் தடுக்கிறேன்
(ஏற்றுக் கொள்ள மறுத்தல்) என்று ஆராய்வேன்.
தடுப்பதற்கு மாறாக நான் ஏற்றுக் கொள்வேன்.
அப்போது அந்த எதிர்மறை எண்ணம் நேர்மறையான ஒன்றாக மாறிவிடும்.
"ஏதோ ஒன்று " அல்லது "யாரோ ஒருவரைக்"குறைக் கூறுவதை நிறுத்திவிட்டு
"ஏற்று கொள்ளும் தன்மை"யைக் கொண்டு வாழ்விற்குச் செயல்விடை அளிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ளத் துவங்கும்போது,
நாம் நம் உணர்ச்சிகளை நிர்வகிக்கத் துவங்குகிறோம்.
மிக நீண்ட பதிவாகி விட்டதற்கு மன்னிக்கவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...