Sunday, August 5, 2018

கருணாநிதி என்கிற உலக மகா பொய்யர் எப்படி எல்லாம் ஊரை ஏமாற்றி வந்திருக்கிறார்.......

என்பதை எண்ணற்ற உதாரணங்களை முன் வைத்துச் சொல்லலாம் என்கிற பொழுதிலும் , அவரது ஊழல்கள் என்பதை விட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது , பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது , அவர் வரலாற்றை சிதைத்து இன்றைய தலைமுறையை அறியாமையில் வைத்திட செய்திடும் செயல்கள் தான் ... இந்த அக்கிரமம் மகாபாவம் ... வரலாற்றிற்கும் , வரும் தலைமுறையினருக்கும் இழைக்கப் படும் மிகப் பெரிய துரோகம் .................................
15 /01/2011 அன்று நடந்த திருவல்ல்வுவர் பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கருணாநிதி இப்படி பேசுகிறார் :
""""நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்' என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம்.
ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார். """""
இது தான் கருணாநிதி சொன்னது ... எவ்வளவு பெரிய பொய் இது ?
வள்ளுவனுக்கு உருவம் படைத்திட வேண்டும் என்று ஓவியக் கலைஞர் மாமேதை வேணுகோபால் ஷர்மா அவர்கள் தனது 12 வது வயது முதலே சிந்தித்து வந்து , பல ஆராய்சிகளின் அடிப்படையில் , முக்கியமாக பாரதிதாசன் அவர்களின் உந்துதலினால் , அண்ணா அவர்களின் ஆதரவுடன் , இயற்றப் பட்டது தான் அந்த ஓவியம் . முதன் முதலில் வள்ளுவனுக்கு வடிவம் தந்து உலகம் பார்த்தது அப்பொழுது தான் , இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு எனலாம் . மேலும் அண்ணா காமராஜர் என்று குறிப்பிட்டு விட்டு கருணாநிதி தன்னையும் சேர்த்து கூறியிருப்பது இந்த ஓவியத்தை வெளியிட துணை நின்ற அனைத்து பெரிய தலைவர்களையும் மறைக்கும் செயல் ... கண்டிக்கத் தக்க செயல் . தோழர் ஜீவா , மு வரதரசான் , கக்கன் , ராஜாஜி , சம்பத் , சாண்டில்யன் , தமிழ்வாணன் , சி.பி சிற்றரசு , டாக்டர் சுப்பராயன் , கண்ணதாசன் என்று பல தலைவர்கள் முன் நின்று இந்தப் படம் சட்டப் பேரவையில் இடம் பெற்றிட வேண்டும் என்று முனைந்து ... இது 1964 ம் ஆண்டு முதல்வர் பக்தவத்சலத்தின் ஆட்சியில் வெளியிடப் பட்டது என்பது வரலாறு ... அப்பொழுது கருணாநிதி ஒரு எம் எல் ஏ , அவ்வளவு தான் .
இந்த ஓவியம் அந்த ஓவிய மாமேதையின் 40 ஆண்டுகால உழைப்பின் பலன் . எதோ கருணாநிதி அதில் சம்மந்தப் பட்டதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய் .. அந்த ஓவியத்தை பார்க்க வந்து சென்றவர்களில் ஒருவராக இவரும் இருந்திருக்கலாம் அவ்வளவே ...
இதில் இன்னொரு பொய்யையும் கருணாநிதி அவிழ்த்து விடுகிறார் , அதாவது , அந்த ஓவியத்தில் வள்ளுவனுக்கு பூணூல் இருக்க வேண்டும் என யாரோ சொன்னதாகவும் , அதை மறைக்கவே சால்வையுடன் வள்ளுவனை திரு வேணு கோபால் ஷர்மா வரைந்ததாகவும் சொல்கிறார் ...
அடப் பாவமே , என்ன தான் சம்மந்தப் பட்டவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை என்றாலும் , இப்படியா உண்மையை மறைப்பார்கள் ?
அந்தப் படத்தில் கயிறு வள்ளுவனுக்கு அணிவிக்கப் பட்டது உண்மை தான் . ஆனால் கருணாநிதி சொல்வதைப் போல , அது பூணூலாக இல்லை , ஓவிய சாஸ்திரப் படி , சரஸ்வதிய சித்திர கர்ம சாஸ்திரப் படி , ஒரு உருவத்தை வரைந்திடும் பொழுது , அது வெற்று கழுத்துடன் இருக்கக் கூடாது , ஏதாவது ஆபரணம் இருந்திட வேண்டும் . அதனடிப்படையில் , வள்ளுவனுக்கு தங்க ஆபரணங்களோ , வெள்ளி ஆபரணங்களோ அணிவிப்பது பொருத்தமாக இருந்திடாது என்று முடிவெடுத்த அந்த ஓவிய மேதை , பருத்தியாலான கயிறை மாலையாக அவர் கழுத்தில் அணிந்ததாக வரைந்தார் . அதை நீங்கள் அவரது முதல் படத்தில் காணலாம் ....
எனினும் இதை வேண்டாம் என்று அறிவுறுத்தியது பாரதிதாசன் , அவரது கடித்ததில் கடைசி வரியில் , வள்ளுவனுக்கு கழுத்தில் ( மீண்டும் படியுங்கள் , கழுத்தில் ) கயிறு வேண்டாம் என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் . அதனால் அது அகற்றப் பட்டது ....அப்படி பார்பனர் என்பதற்காக பூணூல் அணிவிக்க வேண்டிய குரல் எழுந்தது என்றால் திருநீறு அணிவிக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கும் தானே ? அப்படி எதுவும் நடக்கவில்லையே ...
Image may contain: text
மேலும் , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற கடைசி குறளை , வள்ளுவனுக்கு கீழே தெரியும் ஓலைச் சுவடிகளில் எழுதியிருப்பதாக வரைந்துள்ளார் ... அப்படி வரைந்த நபர் எதற்கு அந்த குறளுக்கு எதிர்மறையாக அவர் வள்ளுவனுக்கு பூணூல் அணிவிக்க வேண்டும் ? மேலும் , இந்த ஓவியம் ஒன்றிற்குத் தான் , எனக்குத் தெரிந்து உலகிலேயே , விளக்குரையும் எழுதிருக்கிறார் திரு வேணுகோபால் ஷர்மா .... திருவள்ளுவர் திருஉருவ பட விளக்கம் என்கிற தலைப்பில் அந்த பத்து பக்க புத்தகத்தின் மறு பதிப்பு கடந்த ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தால் வெளியிடப் பட்டது , இதில் பூணூல் குறித்த எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது ....
Image may contain: 1 person, eyeglasses, sunglasses and closeup
யாரை ஏமாற்றப் பார்கிறார் கருணாநிதி ... இது குறித்த மேலும் பல தகவல்கள் விரிவான கட்டுரையாக வெளி வரவிருக்கின்றன .... இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா பதவியேற்றவுடன் போட்ட முதல் அரசாணை கை எழுத்து .... ஆனால் அதை அனைத்து அலுவலகங்களிலிருந்தும் அகற்றியவர் கருணாநிதி .
ஆதாரங்களை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் , முதல் படம் வள்ளுவனின் முதல் ஓவியம் , அடுத்து பாரதிதாசன் ஓவியர் மாமேதை வேணுகோபால் ஷர்மா அவர்களுக்கு எழுதிய கடிதம் , அடுத்து வள்ளுவனின் படமாக சட்டப் பேரவையில் வைக்கப் பட்டதன் நகல் .
பி . கு : இந்த மாமேதை வரைந்த மூன்று ஓவியங்கள் , சட்டப் பேரவையில் இருக்கும் 12 ஓவியங்களில் சிறப்பு வாய்ந்தவை ... அவை வள்ளுவன் , தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் , காயிதே மில்லத் ஆகும் ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...