Monday, August 13, 2018

இன்று ஆடிப்பூரம்.

ஓம் சக்தி ஓம்.
ஆடி மாதம் பூர நட்சத்திரத் தன்று கொண்டாடப்படுவதே ஆடிப் பூரமாகும். இது அம்மனுக்கு மிகவும் உகந்த நாள். இந்த விழாவின் விசேஷம். அன்று அம்மனை கர்ப்பிணியாக ஆவாகனம் செய்வதுதான். உலகத்தின் தாயான அன்னைக்கு அவள் பிள்ளைகளான நாம் வளைகாப்பு நடத்தி மகிழும்நாளே ஆடிப்பூரம். நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை அம்மன் வயிற்றில் கட்டி கர்ப்பிணி போலத் தோன்றச் செய்வார்கள். இவ்வாறு செய்தால் வம்ச விருத்தியும் நல்ல குழந்தைகளும் தோன்றுவர் என்கின்றன புராணங்கள். கர்ப்பிணிக்கு வளைக்காப்பு அவசிய மல்லவா? அதனால் நலங்குப் பாடல்கள் பாடியபடி அம்பிகைக்கு வளையல்கள் அடுக்கப் படுகிறது. பின்னர் அந்த வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தேவியின் கரத்தில் தவழ்ந்த வளையல்களை இல்லத்தில் வைத்திருந்தால் வாழ்க்கையே ஆனந்தமயமாகும். பெண்கள் தீர்க்க சுமயங்கலியாக இருப்பர். குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆடி வெள்ளியில் மாவிளக்குப்போடும் வழக்கமும் பலரிடம் இருக்கிறது. இவ்வழக்கம் செல்வவளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியம் ஈடேறவும் மாவிளக்குப் போடும் வழக்கம் இருக்கிறது.
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...