Monday, August 13, 2018

பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போலத் தெரிகிறது.....

அழகிரியை திமுகவில் சேர்க்கக் கூடாது.. அன்பழகன் திட்டவட்டம்..
என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?
கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கட்சியின் செயற்குழு கூடவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மு.க.அழகிரி பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போலத் தெரிகிறது.....
தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி.
மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக ஜொலித்தவர்.
ஆனாலும் சில பிரச்சனைகள் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கருணாநிதி மறைவுக்குபின் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க குடும்பத்திலேயே பலர் முயல்கிறார்கள். கருணாநிதி காலத்திலேயே இது நடந்தது.
ஆனால் ஸ்டாலின் தரப்பின் எதிர்ப்பால் இது கைகூட வில்லை.
மீண்டும் அவரை சேர்த்து தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கலாம் என பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தனக்கு வேண்டவே வேண்டாம்...
மாநில அளவிலான பதவிதான் வேண்டும் என்று அழகிரி நிர்பந்தித்தாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது அன்பழகன் ரூபத்தில் அழகிரிக்கு பேராபத்து வந்துள்ளது. அழகிரியை கட்சியில் சேர்க்கவே கூடாது என்று அன்பழகன் திட்டவட்டமாக கூறி விட்டதாக சொல்கிறார்கள்.
சமீபத்தில் மு.க.ஸ்டாலின் அன்பழகனைப் போய்ப் பார்த்தபோது இதுகுறித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது.
அழகிரிக்கு பதவியா? லோக்சபா தேர்தல் முடியும் வரை அவரை சேர்க்காதீர்கள். சேர்த்தால் சரிவராது.
நிர்வாகம் சீர்குலையும்.
இப்போது எல்லாமே நல்லா போய்ட்டிருக்கு.
இதை சீர்குலைக்க அனுமதித்தால் பெரும் பாதகமாக போய் விடும்.
யார் சொன்னாலும் சரி, எங்கிருந்து நெருக்கடி வந்தாலும் சரி, மீண்டும் திமுகவுக்குள் அழகிரி வரவே கூடாது என்று ஸ்டாலினிடமே அன்பழகன் தெரிவித்து விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன......
கட்சியின் மூத்த தலைவர், திமுக என்னும் பாரம்பரிய ஸ்தாபனத்தை பன்னெடுங்காலம் வழிநடத்திய முக்கிய தலைவர் அன்பழகனே இவ்வாறு சொல்லிவிட்டதால் அழகிரி விஷயத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ன மாதிரியான முடிவினை எடுக்க போகிறார்? குடும்பத்தார்களை அனுசரித்து சென்றால்தான் கட்சியை வழிநடத்த முடியும் என்று ஸ்டாலின் யோசிப்பாரா? இல்லை, திமுக தரப்பின் அதிருப்திகளை எல்லாம் மனதில் வைத்து யோசிப்பாரா? மூத்த தலைவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வேலையில் இறங்குவாரா? தெரியவில்லை.
இருப்பினும் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு பங்கம் வராமல் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.
கூடவே, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி 'அழகிரி எங்கே'ன்னு கேட்டுட்டு போனாரே.... அதையும் மனதில் வைத்து யோசிக்க வேண்டியது இப்போது மிக மிக முக்கியமானதாக உள்ளது......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...