Sunday, August 12, 2018

பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.

போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!
ராவணன் உபதேசித்தான்...
1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.
3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.
5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.
6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.
ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.
எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!
பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...