திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரு நாள்களாக மேற்கொண்ட சோதனையில், கடத்தலில் ஈடுபட்ட 13 பயணிகள், அவர்களுக்கு உதவியதாக சுங்கத்துறை உதவி ஆணையர், கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 19 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்களுக்கு சுங்கத்துறையினர் உதவி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி விமானநிலையத்துக்கு மதுரையிலிருந்து சிபிஐ அதிகாரிகள் குழுவினர் வந்தனர். இந்த சோதனை திங்கள்கிழமை பிற்பகல் வரை நடைபெற்றது. அப்போது, வெளிநாடுகளிலிருந்து வந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளை தனிஅறையில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்றது. கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய பயணிகளை மட்டும் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு, மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பயணிகள் வெளிநாடு சென்று வந்த விவரங்கள், நோக்கம், கொண்டு வந்த பொருள்கள், அவற்றுக்கு விதிக்கப்பட்ட வரிகள், லஞ்சம் ஏதும் கொடுக்கப்பட்டதா? என்பன உள்ளிட்ட விவரங்களையும், அதிகாரிகள் தரப்பில், விதிக்கப்பட்ட வரி விவரங்கள், அலுவலகத்தில் இருந்த ரொக்கம் மற்றும் வசூலிக்கப்பட்ட ரொக்க விவரம் உள்ளிட்டவை குறித்து அப்பயணிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறுகிய காலத்துக்குள் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் கடத்தி வந்த தங்கம் உள்ளிட்ட பொருள்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது. அப்போது, அடிக்கடி பயணிகள் மற்றும் வியாபாரிகள் போர்வையில் வெளிநாடு சென்று தங்கக் கடத்தல் சம்பவத்தில் பலரும் ஈடுபட்டு வந்ததும், அவர்களுக்கு சுங்கத்துறை அலுவலர்கள் பலர் உதவியதும், கடத்தல்காரர்களிடம் கிடைக்கும் தொகையை அதிகாரிகள் முதல் பலரும் பங்கிட்டுக் கொள்வதும் தெரியவந்தது.
19 பேர் கைது: இதனையடுத்து சிபிஐ தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சுங்கத்துறை (திருச்சி விமான நிலையம்) உதவி ஆணையர் எம். வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, எஸ். ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் எஸ். அனீஸ்பாத்திமா, பிரஷாந்த் கௌதம், சுங்கத்துறை ஊழியர் ஃப்ரெட்டி எட்வர்டு, பயணிகள் எஸ். முருகேசன் (புதுக்கோட்டை), தீவகுமார் மற்றும் அவரது மனைவி தமயந்தி (திருச்சி), மனோகரன் முத்துக்குமார் என்கிற சரவணன் (திருச்சி), அப்துல் ரமீஸ், கங்கா பாலசுப்பிரமணியன், சந்திரா ராஜாங்கம், ராமலட்சுமி வேலுசாமி, லட்சுமி மற்றும் அவரது கணவர் பரமசிவம், பால்சாமி, இலங்கை குடியுரிமை பெற்ற மகேஸ்வரன், சு. சுரேஷ் ஆகிய 19 பேரும் கைது செய்யப்பட்டு மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சோதனையின்போது, கணக்கில் வராத சுமார் ரூ. 8 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெயருக்காக பறிமுதல் நாடகம்: திருச்சி விமான நிலையத்தில் அண்மைக் காலங்களில் சுமார் 47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சிபிஐ க்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால், காவல் துறையில் வழக்குப் பதிவு செய்வது போலவே, பெயரளவில் சுங்கத்துறையினரும் பறிமுதல் நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கமே 47 கிலோ என்றால், வெளியே சென்ற கடத்தல் தங்கம் எத்தனை கிலோ என்பதைக் கணக்கிடமுடியாமல் சிபிஐ அதிகாரிகள் திகைத்தனர்.
ரூ. 14.10 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கம்: ஜனவரி மாதத்தில் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கமும், பிப்ரவரியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள 6.700 கிலோ, மார்ச்சில் ரூ. 1.20 கோடி மதிப்புள்ள 4 கிலோ, ஏப்ரலில் ரூ. 2.10 கோடி மதிப்புள்ள, 7 கிலோ, மே மாதத்தில் ரூ. 1.70 கோடி மதிப்புள்ள 5.7 கிலோ, ஜூனில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள 9.8 கிலோ, ஜூலையில் ரூ. 2.70 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் என, மொத்தம் ரூ. 14.10 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கம் கடந்த, 7 மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment