உழைக்காமல் எதுவும் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.
இங்கு நாம் எப்படி புரிந்து கொள்வது.
உலகில் பிறந்த அனைவரும் உழைக்கிறோம்.ஆனாலும் எல்லோரும் அம்பானியாக முடியுமா?
ஓடி ஓடி உழைத்தாலும் ஒரு கோடி ரூபாய் கூட வாழ்நாள் முழுதும் சேர்க்கமுடியாமா என்றால் சிலர் ஆம் என்பர். பலர் ஆகாம் என்பர்.
இறைவன் எல்லோருக்கும் 24 மணி நேரத்தையே சரியாக வழங்கியுள்ளான்.
உழைப்பின் பலன் சமமாக இருக்கிறதா?
ஜவுளிகடையில் காலையிலிருந்து இரவு வரை வேலை.சம்பளம் 8000 To 10000.
சிலர் கேட்கலாம் அடிமை வேலை அவ்வளவு தான் சம்பளம் கிடைக்குமென்று.சுய தொழில் செய்யலாம் என்று சொல்வார்கள்.
சரி சுயதொழில் செய்தால் எத்தனை பேர் சிறப்படைகிறார்கள்.
சினிமாவில் வேண்டுமானால் ஒரு பாடலில் கோடீஸ்வரனாக முடியும்.
அதிலும் அண்ணாமலை படத்தில் உழைத்து முன்னேறுவது போல் காட்டப்பபட்டிருக்கும்.
பால் வியாபரம், பால் கோவா செய்வது போல் காட்டபட்டிருக்கும்.
சவால் விடுகிறார்.
கடுமையாக உழைக்கிறார். நல்ல விஷயம் தான்.
கடுமையாக உழைக்கிறார். நல்ல விஷயம் தான்.
பால்கோவா விற்கிறார்.அது உழைப்பு.ஆனால் அதை கடைக்காரர் வாங்க வேண்டும் .பொருள் அழிய வேண்டும்.அதுதான் அதிர்ஷ்டம்.
(ஒரு வேளை ராகு திசை 18 வருடம் நல்ல நிலையில் இருந்து திசை நடத்தியிருக்குமோ. அந்த பாடல் முடியும் போது 18 வயது மகள் இருப்பார்.)
உழைப்பின் பயன் முழுமையாக கிடைக்க அதிர்ஷ்டத்தின் துணை நிச்சியம் தேவை.
இல்லையென்றால் அதிர்ஷ்டம் என்ற சொல் தமிழ் அகராதியில் இடம் பெற்றிருக்காது.
சிலர் வருடங்களுக்கு முன் என் குருநாதர் அதிர்ஷ்டம்
C.சுப்ரமணியன் அய்யா அவர்கள் பால ஜோதிடத்தில் எழுதி இருந்தார்.
C.சுப்ரமணியன் அய்யா அவர்கள் பால ஜோதிடத்தில் எழுதி இருந்தார்.
ஒரு மனிதனை அறிவாளியாக்குவதும்,முட்டாளாக்குவதும் கிரகங்களே. தனிப்பட்ட அறிவு என்பது இங்கு இல்லை. கிரகங்களின் ஆளுமையே உயர்த்தும்,தாழ்த்தும் என குறிப்பிட்டு இருந்தார்.
உண்மைதான்
தகுதியே இல்லாத சிலர் காக்காய் பிடித்து உயர்நிலைக்கு செல்வதும் ,தகுதியானவர் தவிர்க்கப்படுவதும் இதனாலே.
பஸ் நிலையத்தில் ஹோட்டல் வைத்திருப்பபவர் ஈ ஓட்டுவதும்,சந்தில் ஓரமாய் கடை வைத்திருப்பபவர் கல்லா கட்டுவதும் அவரவர் வாங்கி வந்த வரமே.
ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று நல்ல நிலையில் இருந்தால் அதிர்ஷ்டமானாவர்.
5,9 நல்ல நிலையில் மிகவும் வலுப்பெற்றிருந்தால் அனுவிப்பபதற்காக பிறந்தவர்.
லக்னாதிபதியோடு 5,9 தொடர்பு பெற. ஒரே Attempt ல் எதிலும் வெற்றிகனியை பறிப்பர்.
நல்ல தசாபுத்தியும் நடப்பில் இருக்க வேண்டும்.
குடும்பிட போன தெய்வம் குறுக்கே வருவதும் இவர்களுக்கே.
ஆதனால் கடவுள் வழிபாடு,புண்ணியம்,நல்லது செய்து 5,9 மிடத்தை வலுப்பபடுத்துவோம்.
நன்றி.
No comments:
Post a Comment