Saturday, December 29, 2018

" குச்சிகிழங்கு "

குச்சிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்ட காலம் ஒரு பொற்காலம்..!
இன்று பீட்சா,பர்கர்,ஐஸ்கேக், சாக்லேட்கேக் என எண்ணற்ற தின்பண்டங்கள் வந்து விட்டாலும், இந்தியன் கேக் என மக்களால் அழைக்கப்பட்ட குச்சிக்கிழங்கின் சுவைக்கு அவை ஈடாகாது...!
நம் சிறு வயது காலங்களில் வேகவைத்த குச்சிகிழங்கை சூடாக சர்க்கரை தொட்டு சாப்பிட்டது இன்றும் மறக்கமுடியாத ஒரு பொன்னான நினைவாகும்..!
ஏழை,எளிய மக்கள்,நெசவாளர்களின் பசியை அன்று போக்கியது இந்த குச்சிகிழங்கு தான்...!
வேக வைத்த குச்சிகிழங்கை சாலையோரங்களில் சிறுகடைகளில வைத்து விற்பார்கள்...! தொட்டுக்க சட்னியும் தருவார்கள்...!
வறுமைமிகுதியால்

இரண்டு துண்டு கிழங்கு சாப்பிட்டு பசியை போக்கி விட்டு வேலைக்கு சென்றவர்கள் பலர்...! பள்ளிக்குழந்தைகளுக்கும் அன்று காலைஉணவு பெரும்பாலும் குச்சிக்
கிழங்கு தான்..!
வேகவைத்த குச்சிக்கிழங்கை மறுநாள் கடுகு,உளுத்தம்பருப்பு, வரமிளகாய் போட்டு தாளித்து மசாலா கிழங்காய் உண்பர்...! அது தனிச்சுவையாக சூப்பராக இருக்கும்..!
ஞாயிறுக்கிழமைகளில் மாலை வேளைகளில் குச்சிகிழங்கை நன்கு வேகவைத்து சூடான கறிக்குழம்பில் தொட்டு சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் நாவூறுகிறது...!
இன்றைய புரோட்டா,
பாஸ்ட்புக் காலத்தில் குச்சிகிழங்கை காண்பது சாப்பிடுவது அரிதாகி விட்டது என்றாலும்
அன்று தமிழர்களின் வாழ்வோடு இணைந்திருந்த குச்சிக்குழங்கை என்றும் மறக்க இயலாது...!
நீண்ட நாட்களுக்கு இன்று சூடாக வேகவைத்த குச்சிகிழங்கை சர்க்கரை தொட்டு சாப்பிட்ட போது, மனதில் சிறுவயது குச்சிகிழங்கு ஞாபகங்கள் தோன்றியது ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது...!
Image may contain: fruit and food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...