1. மகாலட்சுமி (நிற்கின்ற நிலையில்) உள்ளபடம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். நிற்கின்ற நிலையில் உள்ள எந்த தெய்வமும் உடனுக்குடன் பலன் தரும் என்பது ஐதீகம் (எ.கா. முருகன், வெங்கடாஜலபதி) அமர்ந்து இருக்கும் நிலையில் மகாலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்க தாமதம் ஆகும். ஆனால் நற்பலன்கள் கிடைக்காமல் போகாது.
2. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
3. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் எடுத்து இட்டுக் கொள்வதே நல்லது.
4. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது.
5. பெண்கள் மாதவிலக்கின் போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
6. செவ்வாய்க் கிழமை, புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
8. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும்.
9. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.
10. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
11. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
12. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
13. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு என்பது பெரியோர்கள் கருத்து.
14. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
15. வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது.
16. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
17. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
18. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
19. கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்கும் வறியவர்களுக்கு தானம் செய்து விட்டுப் போக வேண்டும் அதாவது அந்த தானம் செய்த தர்ம பலனுடன் தான் இறைவனின் சன்னதியை அடைய வேண்டும் கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை அளிக்காது.
20. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
21. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது பேசினால் சுபம் தடைபடும்.
22. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது.
23. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியே தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
24. புனித தீர்த்தங்களில் இறங்கும் போது எடுத்த எடுப்பில் காலை குளத்தில் வைக்கக் கூடாது. குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெறித்து அனுமதி வாங்கிய பிறகு தான் குளத்தில் கால்களை வைக்க வேண்டும். அது போல கோயிலுக்குள் செல்லும் போது வாய்ப்பு இருந்தால் கால்களை கழுவி விட்டு செல்வது நல்லது. இறைவனை தரிசித்து விட்டு வந்த பின்னர் கால்களை கழுவுதல் கூடாது.
No comments:
Post a Comment