அ.தி.மு.க ஆதரவுடன் வாஜ்பாய் அவர்கள் இரண்டாவது முறையாக பிரதமராக 13 மாதங்கள் ஆட்சி செய்தார் -
அந்தப் 13 மாதங்களும் ஜெயலலிதா தி.மு.க ஆட்சியை 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்குமாறு நிர்பந்தப்படுத்தினார் -
ஆனால், வாஜ்பாய் அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை என்பதால் -
இறுதியில் தி.மு.கவிற்காக ஒற்றை வாக்கில் ஆட்சியையே தியாகம் செய்தார் -
அதன் பிறகு நடந்த தேர்தலில் தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி சேர்ந்து வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார் -
அவரது அமைச்சரவையில் முரசொலிமாறன் தொழில்துறை அமைச்சரானார் -
இறுதியில் கிட்டத்தட்ட இறந்து விட்ட மாறனை மத்திய அரசின் செலவில் ஆறு மாதங்கள் பேஸ்மேக்கர் உதவியுடன் வைத்திருந்துவிட்டு -
அவர் இறந்த உடன் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் -
அவரது இறுதிச் சடங்கிற்கு உடல் நலமில்லாத நிலையிலும் வாஜ்பாய் அவர்கள் கலந்து கொண்டார் -
அடுத்த நாளே, நாலரை வருடம் மத்திய அரசில் அமைச்சர் பதவிகளை அனுபவித்த தி.மு.க-
பா.ஜ.கவை மதவாதக் கட்சி என்று தூற்றிவிட்டு _
கூட்டணியிலிருந்து வெளியே வருகிறது -
கூட்டணியிலிருந்து வெளியே வருகிறது -
அது மட்டுமல்ல -
அதன் பின் நடந்த ஒரு தி.மு.க கூட்டத்தில் -
கருணாநிதி முன்னிலையில் வாஜ்பாய் அவர்களின் நடையைக் கேலி செய்து அதே போல நடந்து காட்டினான் துரைமுருகன் -
இது தான், தி.மு.க-
இது தான் கருணாநிதி -
இதைப் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளைக் கூறலாம் -
கருணாநிதியின் பண்பு பற்றி -
எதற்காக ஒருவனை செத்த பிறகும் கூட -
விடாமல் விமர்சிக்கிறோம் என்று புரிகிறதா?-
No comments:
Post a Comment