பெட்ரோல்/டீசல் விலை இன்று ₹100 கடந்து விட்டது. ஆனால் பேரல் $124 க்கு குரூட் ஆயில் விற்றபோது கூட மன்மோஹன் அரசு இவ்வளவு விலை ஏற்றவில்லை என்று கேட்கும் மீடியாவும், பலரும் அன்று அதை எப்படி சமாளித்தார் என்று யாராவது கேட்டதுண்டா?
நாமாவது கேட்போம்.
அன்று அளவுக்கதிகமான விலையை குரூட் ஆயில் தொட்டபோது அந்த அரசு என்ன செய்தது தெரியுமா?
வாங்கிய குரூட் ஆயிலுக்கு பணம் கொடுக்க முடியாமல் கடனாக வாங்கியது. அதன் விளைவு
இரானுக்கு $48000 கோடி,
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு $40000 கோடி என்று $88000 கடன் வைத்தது. இது மட்டுமா, மற்ற நாடுகளுக்கும்தான்.
இந்த கடன் வெளிநாட்டில் மட்டுமல்ல இங்கும் இல்லாமல் இல்லை.
மேலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய $120000 கோடி அரசு கடன் பத்திரங்களை விற்றது.
அது மட்டுமா?
மூன்று இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு 133000 கோடி, இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி, இந்திய ரயில்வே 22000 கோடி
பி.எஸ்.என்.எல் 1500 கோடி என்று கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க முடியவில்லை. மொத்தமாக மத்திய அரசின் கடன் சுமை இவை மட்டுமே குறைந்த பட்சமாக $334000 கோடி. அது தவிர மற்ற நாடுகளிடமும் கடன் வாங்கியது. அதை கட்டவேண்டும் எனில் மிக நேர்த்தியான, தைரியமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். ஓட்டு அரசியல் செய்யும் ஒரு அரசு அதை செய்ய முடியாதபோது அந்த கடனுக்கு வட்டியாக மட்டும் கிட்டத்தட்ட $40000 கோடியை வருடா வருடம் கொடுக்க வேண்டிய சூழல், இயலாத அரசு அதைத்தான் செய்தது. அதாவது
நாடு திவால் என்ற நிலையை நோக்கி நகர்ந்தது.
அதிர்ஷ்ட வசமாக இரண்டு நிகழ்வுகள் நடந்தது. ஓபெக்கில் இல்லாத அமெரிக்க, ரஷ்ய நிறுவனங்கள் குரூட் உற்பத்தியை அதிகரித்தது. அதனால் குரூட் ஆயில் விலை குறைந்தது. இரண்டாவது இந்தியாவில் ஆட்சி மாற்றம்.
இப்போது பிரதமரான மோடிக்கு இரண்டு வாய்ப்புகள்.
ஒன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அதன் பயனை மக்கள் அடைய செய்வது. ஆனால் அப்படி அது குறைந்தாலும் ஏற்றிய வாடகைகள் அது ஆட்டோவாக இருக்கட்டும் அல்லது லாரி, கப்பல், விமான போக்குவரத்து என்று எதுவும், எப்போதும் குறையப்போவதில்லை. அப்போது நாட்டின்மீது அக்கரை கொண்ட நீங்கள் பிரதமராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
அப்படி குறைத்து அதன் பயன் மக்களுக்கு கிடைக்காது என்று நன்கு தெரிந்த பிரதமர் ஓட்டு அரசியல் செய்யாமல் கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து, வருஷம் $40000 கோடி வட்டி கொடுப்பதை இந்திய அரசு சேமித்தது. அதாவது அன்று குறைவாக வாங்கிய பெட்ரோலுக்கு வட்டியோடு சேர்த்து இப்போது கொடுக்கிறோம். ஆனால் மத்திய அரசு 1 லிட்டர் பெட்ரோலுக்கு ₹27 வரியாக வாங்கி கடனை அடைத்தது. அதே அளவு மாநிலங்கள் தங்கள் வரியை உயர்த்தி பெற்ற ஆதாயத்தை என்ன செய்தார்கள்? நாம் யாராவது கேட்டோமா? எப்படி கேட்பது, நமக்குத்தான் மாநில அரசு உயர்த்திய வரியை பற்றியே தெரியாத மகான்கள் ஆச்சே?
கிட்டத்தட்ட கடன்கள் அடையும் நிலையில் வந்துவிட்டது, ஆனால் ஏன் இன்னும் அதே அளவு வரியை மத்திய அரசு விதிக்கிறது?
நியாயமான கேள்வி!
நாம் ஒவ்வொரு வருடமும் $120 பில்லியன் குரூட் ஆயில் வாங்குவதற்கு மட்டுமே செலவிடுகிறோம். நமது பட்ஜெட்டில் அது மிகப்பெரிய தொகை, அதன் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிறது. அதனால் நாம் நம் கட்டமைப்பை விரிவு படுத்த முடியாமல் திணறுகிறோம். அது மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகள் நம்மிடம் இருந்து வாங்கும் பணத்தை வைத்து மத தீவிரவாதம் மூலம் நம் நாட்டையே பிளாக்க பார்க்கிறார்கள். அதாவது நம் கைகளை கொண்டே நம் கண்களை குருடாக்குவது. அப்போது அது இரண்டிற்கும் ஒரே மாற்று என்பது நமக்கு தேவையான எரிபொருளை நாமே உற்பத்தி செய்வது. நமக்கு குரூட் ஆயில் இல்லை அதனால் அதற்கு மாற்று Electricity.
கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும் Renewable Energy மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவது ஒன்றே தீர்வாகும். அப்படி நாம் மாறவேண்டும் எனில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரவேண்டும், உயர்த்த வேண்டும், உயரத்தான் வேண்டும். அப்போது அதன் சுமை தாளாமல் நாம் ஒவ்வொருவரும் மாற்று எரிபொருளுக்கு மாறவேண்டிய கட்டாயம் என்ற சூழலுக்கு தள்ளப்படுவோம். அந்த சூழலைத்தான் அரசு தோற்றுவிக்கிறது.
எனவே இனிமேல் பெட்ரோல் டீசல் விலை என்றும் குறையாது. ஆனால் அது தவறல்ல.. அது நமக்கு இப்போது சுமையை கூட்டினாலும் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சியை நம் நாடு அடையும். ஒரு பெரிய அளவு பணம் சேமித்தல் மட்டுமல்ல, நம் பணம் தவறானவர்களிடையே செல்லாது, அதுவே நமக்கு எதிராக திரும்பாது. அது மட்டுமல்ல, நாம் சுற்று சூழலை பாதுகாப்பதில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை நாமும் அடைந்து உலகத்துக்கு முன் மாதிரியாக நிற்போம்.
இதில் கஷ்டங்கள் இல்லாமல் இல்லை, ஆனால் நம் சுதந்திரத்திற்காக உயிரையே கொடுத்த சுதந்திர போராட்டா வீரர்கள் அளவுக்கு இல்லை. ஆனால் நாமும் இதில் பங்கு கொள்வதால் அடுத்த சுதந்திற்கு நாமும் ஒரு போராட்ட வீரராகும் தகுதியை அடைகிறோம்.
வாழ்க பாரதம்!
ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment