Monday, July 19, 2021

கும்பகோணம் வெற்றிலை.

 கும்பகோணம் வெற்றிலை என்று சொன்னாலும், வெற்றிலை எல்லாம் பயிரிடபடுவது என்பது அதன் சுற்று வட்டார பகுதிகளில்தான், அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் இருந்து கும்பகோணம் வருகிறது !

வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான் ! வெற்றிலை என்று நாம் சொன்னாலும் அதன் பெயர் காரணம் என்னவென்று தெரியுமா ? எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும், இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் ஜாஸ்தி தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் மூன்று வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம் !
வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை, அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள், இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகாளாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம், ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு..... கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை. இதையே வேளாண்மை அறிவியல்படி பார்த்தால்..... கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.
அது என்ன கும்பகோணம் பகுதியில் மட்டும் வெற்றிலை அவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு........ வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது.
May be an image of plant and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...