வெளியில் எங்கு சென்றாலும்..வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு செல்வது நல்லது.அல்லது தரமான கடைகளில் தரமான ப்ராண்ட் வாட்டர் பாட்டில்..பிஸகட் இவை வாங்குவது நல்லது..
பெரும்பாலான ஹைவே கடைகளில், நம் எதிர் பார்ப்பில், பொருட்கள் கிடைப்பதில்லை.
இருந்தாலும் அவர்கள் வைப்பதே விலை.
ஒரு கடையில் வாட்டர் பாட்டில் வாங்கினேன்...23 ரூ என்றார்.
"அனேகமா ஹைவேல நீங்க தான்அதிக விலை "என்றேன்.
"இல்லை சார் 27 ரூ வரை விற்கின்றனர்.கூலிங்கிற்காக 3ரூ அதிகம்..எங்களுக்கு நிறைய செலவுள்ளது" என்றார்.
காருக்கு வந்தவுடன் கூலிங் வேண்டாம் என்றார் உடன் வந்தவர்..திருப்பி மாற்றி வாங்கி வந்தேன்..3 ரூபா திருப்பி தரவில்லை..
நியாயமா வர்னா குடுத்திருக்கனும்..3ரூபா நாள் பூரா எதையும் யோசிக்க விடலை.
ஒன்று தண்ணீர்..கொண்டு செல்லனும்..அல்லது எந்த பொருளையும் விலை பார்க்காது வாங்க பழகனும்..அல்லது சில சமயங்களில் சிலதை பெரிசா யோசிக்கக் கூடாது.
Complaint பண்ண அவர் மொபைல் நம்பர் store பண்ணினேன்... பண்ணவில்லை, அந்த பகுதியில் சில தகவல்களுக்கு உதவியது. அடிக்கடி போனில் பேசியதில். பழக்கம் ஏற்பட்டது.
பின் நண்பராகி இரண்டு வருடங்கள் கழித்து,பார்க்க சென்ற போது, நான் வாங்கிய பாட்டிலுக்கு பணமே வாங்கவில்லை அது வேறு.
ஒரு கடையில் இரு பெண்கள் புடவை வாங்கினர்..முதல் நாள் வாங்கினவர்..950ரூபாய்க்கு வாங்கி வந்தார்..அதைபார்த்து நன்றாயிருந்ததால்..விலாசம் கேட்டு அதே கடையில் அதே புடவை இவர் சிபாரிசில் பக்கத்து வீட்டு பெண் வாங்கினார்
இரண்டாமவரிடம்.50 ரூ அதிகமாக வாங்கி விட்டார் அந்த கடைக்காரர்.
இரண்டாவதாய் வாங்கியவர்கு கோபம்..எரிச்சல்..கடைக்காரர் வம்சம் முழுதும் இரவு வரை திட்டியும்..50ரூபாய் அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது.
இரவுவரை அழகு தந்த புடவை எரிச்சலாக்கிக் கொண்டிருந்தது.
கதவு தட்டும் சத்தம்..கதவைதிறந்தால் கடைக்காரர்.
"என்ன "என்றார் எரிச்சலாய் இந்த அம்மனி.
"நீங்க காலைல கடைக்கு வந்தப்ப..உங்க பேக் வச்சிட்டே வந்திட்டீங்க..எல்லாம் சரியாயிக்கா பாருங்க.."என்றார்
பவ்யமாய்..
அப்போது தான் நினைவு வந்தது..அது வரை பை காரில் உள்ளதாகவே நினைத்துக் கொண்டிருந்தார். பிரித்து பார்த்தால்..50000 பணம்.1செயின் எல்லாம் பத்திரமாய்..ஒன்றரை லட்சம் மதிப்பு இருக்கலாம்.
"கடையில கூட்டம்மா இலலைன்னா முன்பே வநதிருப்பேன்" என்றார்.
"இவ்வளவு நேர்மையான நீங்கள் என்னிடம் 20ரூபாய் அதிகமா வாங்கீட்டீங்களே நியாயமா.."என்றாள்.அப்போது கூட, அந்த 50ரூ அவரை விட வில்லை..
"அம்மா 50ரூபாங்கரது வியாபாரம்மா.."
"நியாயமா திருப்பி உங்க பொருளை தர்ரது என் மனோதர்மம் "என்றவாறு சென்றார் சிரித்தவாறே.
50 ரூபாயால் வந்த உலைச்சல் ..அவரின் நேர்மையால் உயர்வான மதிப்பை தந்தது.
மனித மனம்..சூழ்நிலை...தேவை..பணம் இதை வைத்தே உறவை நிர்ணயிக்கிறது..
.அன்பு பாசம்.நேர்மை இவை...50ரூபாய் போலவே..! சமயத்தில் மனம் அந்த நாளையே வீணாக்கி விடும்.. சரியான புரிதல் இன்றி.
முடிந்த வரை மனோ தர்மத்துடன் வாழலாமே..!
சொர்க்கம், நரகம் இவையெல்லாம், நம் மனம், அனுபவம், ஒவ்வொரு மனிதரின் அணுகுமுறை வைத்தே வருவது....
No comments:
Post a Comment