Sunday, July 18, 2021

ஒருபோதும் நம் தாய்மதத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கவேண்டும்!

 நான் ஒருவரை மனப்பூர்வமாகக் காதலித்து வந்தேன். அவரைக் காதலிக்கும் போது அவர் என்ன மதம் என்று நான் பொருட்படுத்தவில்லை.

அவரை எனக்கு பிடித்திருந்தது, ஆதலால் நான் அவரை நேசித்தேன். என் வீட்டில் எங்களின் திருமணத்திற்கு சம்மதம் தந்தனர்.
நான் நேசித்தவரின் பெயர், ஜார்ஜ். அவர் என்னை அவரின் குடும்பத்தாரை சந்திக்க என்னுடைய காரில் அழைத்துச் சென்றார். என்னை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, ஜார்ஜ் ஒரு வேலை காரணமாக அவரின் பைக்கை எடுத்து வெளியே சென்றுவிட்டார்.
அவர் குடும்பத்தார் என்னிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லியிருப்பார்கள் போலும்... அப்போது தான் முதன்முதலில் அவரின் வீட்டைப் பார்த்தேன். வீடு முழுவதும் சிலுவைகள், ஜீசஸ் சித்திரங்கள், பைபிள் வாசகங்கள் நிறைந்திருந்தன.
ஜார்ஜ்ஜின் தாயாரைக் கண்டு வணக்கம் கூறினேன். அவர் கழுத்தில் தாலியைப் போல் சிலுவை தொங்கியது. என் நெற்றியில் இருக்கும் பொட்டைப் பார்த்து என்னிடம் "கல்யாணத்துக்கு அப்புறமும் இவ்வளவு பெரிய பொட்டு தான் வைப்பியா?" எனக் கேட்டார்.
நானும் சிரித்துக் கொண்டே "அதுதானே நம்ம பண்பாடு?" என சொன்னேன்.
ஜார்ஜ்ஜின் தாயார் முகத்தை சளித்துக் கொண்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து ஜார்ஜ்ஜின் தந்தை வந்தார். நான் உடனே சோபாவில் இருந்து எழுந்து வணக்கம் என சொன்னேன். "நீதான் ஜார்ஜ்ஜை காதலிக்கிற பொண்ணா?" என கேட்டார்.
"நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்" என பதில் கூறினேன். அவரும் முகம் சளித்தபடியே, ஒரு பெருமூச்சுடன் என் குடும்பத்தைப் பற்றி கேட்டார். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள் என்ற விபரத்தைக் கூறினேன். பின் மற்றமற்ற விபரங்களையும் கூறினேன். அவர் உடனே "ஜார்ஜ்ஜை கல்யாணம் செய்ய எங்க மதத்துக்கு மாற தயாரா?" என கேட்டார். நான் திகைத்துப் போய்விட்டேன்.
"ஜார்ஜ்ஜோட மதத்தை விரும்பி அவனை நான் காதலிக்கல்ல. அவன் மனச விரும்பி தான் அவனை காதலிச்சேன். நீங்க ஒரு பெரிய மனுஷனா இருந்துட்டு மதமாறனும் அது இதுன்னு பேசறிங்க?" என சற்று ஆவேசமாக கேட்டேன். அப்போது ஜார்ஜ்ஜின் தாயார் இடையில் புகுந்து பதில் கொடுத்தார் "எங்க வீட்டுக்கு வரபோற மருமகள் ஒரு கிறிஸ்தவளா தான் வரனும்." என கூறினார். நான் சிரித்தேன்.
அப்போது தான் நான் ஓர் இந்து என்ற விழிப்புணர்வே எனக்கு ஏற்பட்டது. நான் ஓர் இந்து, நான் நேசித்தவர் ஒரு கிறிஸ்தவர். இரண்டும் வெவ்வேறு பாதை. ஓர் இந்து தான் எம்மதமும் சம்மதம் என மூடநம்பிக்கை கொண்டிருப்பான், மற்ற மதத்தவனுக்கு அவன் மதம் தான் பெரியது. இது போன்ற தெளிவான சிந்தனைகள் யாவும் என் சிந்தையில் சூழ்ந்தன.
நான் சிரித்துவிட்டு, மௌனமாக சிந்திப்பதைக் கண்ட ஜார்ஜ்ஜின் பெற்றோர் தாங்கள் வென்றுவிட்டதாக எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். இத்தனை நாட்களாக எல்லா மதங்களும், எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என எண்ணி வாழ்ந்த எனக்கு, அதெல்லாம் சும்மா என அவர்கள் உணரவைத்தனர். நான் பலமுறை கோவில்களுக்குச் சென்றும், பல மந்திரங்கள் ஜெபித்திருந்தாலும், வாயினிக்க தேவாரங்கள் பாடியிருந்தாலும் நான் ஓர் இந்து, என்னோடு பழகும் இன்னவர் இம்மதத்தவர்; இந்துவல்லர் என்றெல்லாம் நான் பிரித்துநோக்கியதே இல்லையே?? இதுதான் எனக்கு கிடைத்த பலன்! என் பூருவீக நம்பிக்கையை நான் தூக்கி எறியவேண்டும். ஏன்?? இந்து பலவீனமானவன்.
முடிவாக எம்மதமும் சம்மதமில்லை, என் மதம் மட்டுமே சம்மதம் என முடிவெடுத்தேன். என்னுடைய கார் சாவியை எடுத்து வெளியேறினேன். "வீட்டுக்குப் போய் நல்லா யோசிச்சி பதில் சொல்லும்மா" என குழைந்தனர் ஜார்ஜ்ஜின் பெற்றோர். "நல்லா யோசிச்சிட்டேன். எனக்கு நல்ல மனசுள்ள புருஷன், மாமனார், மாமியார் தான் வேணும்; மதம்புடிச்ச மிருகங்க வேணா!" என கூறிவிட்டு காரை எடுத்து அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
மகனை மணக்க மதமாற சொல்லும் அரக்கர்கள் பூமியில் இருக்கையில், என் மதத்தை தற்காத்துக் கொண்ட என்னை 'மதவெறி பிடித்தவள்' என்று கூறும் அறிவிலிகளும் உள்ளனர்.
என் வீட்டிற்கு திரும்பியவுடன், நடந்ததை எல்லாம் என் அம்மாவிடம் கூறினேன். உடனே என் அம்மா, "மனுஷங்கள விட மதத்த பெருசா நினைக்கிறவங்க உலகத்துல இருக்காங்க. ஆனா அவங்க பெருசா நினைக்கிற மதம் தான் அவங்கள மனுஷனாவே வாழவிடாம, மிருகமா வாழவைக்குது." என சொன்னார்.
ஜார்ஜ் என்னை சந்தித்து பேசினான். "மனுஷங்க இல்லாத வெறும் மதம் மட்டும் வாழுற வீட்டுல வந்து வாழ எனக்கு விருப்பமில்ல" என சொல்லிவிட்டேன். பிறகு, என் அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட்டு அவனை மறக்க ஆரம்பித்தேன். ஐந்தாண்டுகள் கடந்தன.
இப்போது இரண்டு வயதில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவள் பெயர் கலையரசி. என் கணவரின் பெயர் கணேசன். நான் இப்போது என் அன்பு கணவர் மற்றும் மகளோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
சிவனருளால், நான் என் வாழ்க்கையில் எப்போதும் மிக சரியான முடிவை எடுக்க தவறியதில்லை! என் மகள் பருவமடைந்ததும் அவளுக்கு நான் ஒன்றை மட்டும் எப்போதும் கூறுவேன், "நீ விரும்புபவன் கறுப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, நெட்டையோ குட்டையோ, என்ன சாதியோ சம்பிரதாயமோ, அதெல்லாம் தேவையே இல்லை. நீ நேசிக்கிறவன் ஓர் இந்துவாக தான் இருக்கனும். நம்ம மொழி, பண்பாடு, சமயம் இதையெல்லாம் காக்கவேண்டியது நம்ம பொறுப்பு". என்னைப் போல் என் இந்து சகோதரிகள், ஒருபோதும் நம் தாய்மதத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கவேண்டும்!
-அன்புடன்
மலேசியாவிலிருந்து தமிழ்ச்செல்வி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...