Thursday, July 1, 2021

நம் அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது....

 பெங்களுர் அருகே *ஹாசன்* என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும்.

அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும்.
இந்த ஸ்வாமியின் பெயர் *ஹாசன அம்மாள்* என்று அழைக்கப்படுகிறது.
மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.
அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும்.
கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும்.
இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும்.
நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது.
அது மட்டுமா?
இன்னும் நிறைய அதிசயங்கள் இருக்கிறது.
முதலில் சொன்னது போல் ஸ்வாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த சந்தனம் இயற்கையாகவே ஸ்வாமி மீது வருகிறது.
அபிஷேகம் முடிந்த பிறகு ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
அதுவும் எப்படி சுட சுட கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது.
அவ்வளவு தானா என்றால் இல்லை.
மேலும் ஒரு அதிசயம் நடை பெருகிறது.
ஸ்வாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள்.
ஆமாம் அதிசயம் தான் ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது,
நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது,
ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும்,
சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு. அபிஷேகம் செய்து முடித்து வெரும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது.
ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று ஸ்வாமிகள் { கற்சிலை } மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.
ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு சொல்லுங்கள் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று.
🙏🙏🙏🙏🙏🙏
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...