இந்த வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர்..
அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955.. அப்போது அவரின் வயதே 30 தான்.. அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை.. அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை.. முழுக்க சினிமா வருமானம்தான்..
அதற்கு முன்பே அவரின் 25 வது வயதில், 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார். அப்போதே அவரின் சம்பளம் 500 ரூபாய்.. அந்த படத்தில் எம்ஜியாருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான் ..
அவர் எதற்கு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்..
கண்ணதாசனோடு சேர்ந்து அவர் ரயிலில் செல்லும்போது, கலைஞர் கொடுத்த பணத்தை கண்ணதாசன் செலவழித்து விட்டு டிக்கெட் எடுக்காமல் விட்டதைத்தான் தன்னைத்தான் ‘அவன்’ என்று வனவாசத்தில் சொல்லியிருப்பார் கண்ணதாசன்..
ஒழுங்காக படித்து புரிந்து கொள்ள முடியாத மூடர்கள் கலைஞர் என்று இன்றும் திரித்துக் கூறிவருகிறார்கள்…
அதைத்தான் திருட்டு ரயில் என்று திரிக்கிறார்களே தவிர, டிக்கெட் எடுக்காமல் வரும் அளவு அவர் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கவில்லை.
அதே போல வேதா இல்லம் போல, கொடநாடு பங்களா போல, ஹைதராபாத் திராட்சை தோட்டம் போல, பையனுர் பங்களா போல ஆடம்பரமாக இடத்தை மாற்றவில்லை.. மழை வெள்ளத்தில் மூழ்கும் அதே வீட்டில் தான் இருந்தார்..
அதே போல 10 லட்ச ரூபாய் கோட்டும், லட்ச ரூபாய்க்கு விற்கும் வெளிநாட்டு காளான் சாப்பிட்டு கவர்மெண்ட் காசில் ஏர்போர்ட் கண்ட இடமெல்லாம் ஊர் சுற்றவும் இல்லை..
இவர்களை விட அவரின் இளமைகால வாழ்வே அவருக்கு எல்லாமே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது..
டீ வித்தவன், நாட்டியக்காரி இவர்கள் ஆடம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இவர் ஆடம்பரமாக இருந்தது இல்லை..
No comments:
Post a Comment