நான் பெண்ணாய்
பிறக்க காரணமானவன்
ஆண் தான் (அப்பா)
என்னை பெண்ணாய்
உணர வைத்தவன்
ஆண்தான் (காதலன்)
என் பெண்மையை
பூக்க செய்தவனும்
ஆண் தான் ( கணவன்)
அதற்கு சாட்சியாய்
வந்தவனும்
ஆண் தான் (மகன்)
நீ ஏன் கர்வம்
கொள்ளக்கூடாது
பெண்ணின் அனைத்து
நிலைகளிலும்
காவலனாய்
நிற்கையில்
ஒரு துளி உயிர்
அணுவில் என்
பெண்மையின்
மகத்துவத்தை
அறிய வைத்து
தாய்மையை
புரியவைத்தவனும்
ஆண்தான்
பெண்மையின்
முக்காலங்களிலும்
ஒவ்வொரு விதத்திலும்
நேரத்திலும் பாதுகாவனாய்
தாயுமானவனாய்
மாறுபவனும் ஆண்தான்
பெண்ணுக்கே என்று
சில விதி/ வரை முறைகள் வைத்தவனும்
சில சமயங்களில்
தவறு என்று
கூறுபவனும்
ஆண் தான்
பெண்ணை அடிமையாய் வைத்ததும்
அடிமைத் தலைகளை
களைய முயல்வதும்
ஆண் தான்
ஆணவம் கொள்ளும்
ஆண்மையே
உன் ஆணவம் பெண்மையை
போற்றி பாதுகாக்கும்
படி அமைந்தால் உன்
ஆணவத்தையே
பெண்ணிணம்
போற்றும்
No comments:
Post a Comment