Wednesday, February 23, 2022

திருப்பூர் மாநகராட்சியில் கூட்டணி தயவை நாடும் தி.மு.க.,

 திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க., தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை; கூட்டணி கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதுமுள்ள, 21 மாநகராட்சிகள், தி.மு.க., வசம் வந்துள்ளன. இருப்பினும் பிற மாநகராட்சிகளைப் போல், திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனது. கூட்டணிக்கட்சிகளுக்கு, 28 வார்டுகளை தாரை வார்க்க வேண்டியிருந்ததால், மொத்தம் உள்ள 60 வார்டுகளில், தி.மு.க., 32 வார்டுகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது.


latest tamil news



இதில், 23 வார்டுகளில் மட்டுமே, தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. இந்திய கம்யூ., - 6, ம.தி.மு.க., - 3, காங்., - 2, மா.கம்யூ., - இ.யூ.மு.லீக். - ம.ம.க., தலா ஒரு வார்டு என, தி.மு.க., கூட்டணி மொத்தம் 37 வார்டுகளில் வெற்றி பெற்றது.மேயர் பதவியைக் கைப்பற்றினாலும் கூட, தி.மு.க., இங்கு தனித்து இயங்க முடியாத நிலை உள்ளது. இங்குள்ள 60 வார்டுகளில் பெரும்பான்மை பெற குறைந்தபட்சம், 31 கவுன்சிலர்கள் தேவை.

குறிப்பாக, கம்யூ., கட்சிகள், வார்டு ஒதுக்கீட்டின்போதே, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்தன.தற்போது கம்யூ., கட்சிகள், ஏழு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதால், கம்யூ., வேட்பாளர்களை நம்பியே ஆக வேண்டிய கட்டாயம், மேயருக்கு ஏற்படும். மேலும், அ.தி.மு.க., 19, பா.ஜ., 2, சுயே., 2 என 23 வார்டுகளை கைப்பற்றியுள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...