ஆண்மையற்ற கணவன்
அகிலம் கொடுத்தது அவளுக்குப் பட்டம்
மலடி...
குடிகாரக் கணவன் குடித்தே செத்தான்
அவளுக்குப் பட்டம்
விதவை...
ஆண் சென்றான் விபச்சார விடுதி
அவளுக்குப் பெயர்
விபச்சாரி...
அடுத்தொரு வாழ்வை அவன்
தேர்ந்தெடுத்தான்
அவளுக்குப் பெயர்
கூத்தியாள்...
இத்தனைப் பட்டமும் யார் கேட்டது
நீங்களாய்க் கொடுத்தீர்கள்
இலவசமாய்...
வாழ்வை இழந்து வசந்தங்களைத் தொலைத்து வதங்கிக் கொண்டு இருப்பவள்
வானவில்...
வாழ்ந்து பாருங்கள் அவளாய்
ஊமை நெஞ்சின் ராகம்
புரியும் அப்போது...
நம் தாயும் ஒரு பெண் தானே
பெண்மையைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment