Friday, January 19, 2018

49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றியமைப்பு.

''ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு, 12 - 18 சதவீதமாக உள்ள வரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது," என, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.
 49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றியமைப்பு

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்தாண்டு ஜூலை, 1 முதல், நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பான சட்டம், வரி விகிதங்கள் குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆய்வு செய்கிறது. மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி தலைமையிலான இந்த கவுன்சிலில், மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.கவுன்சிலின், 25வது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அருண் ஜெட்லி கூறியதாவது:இந்த கூட்டத்தில், 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு, 12 - 18 சதவீதமாக உள்ள வரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதைத் தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது; இது, வரும், 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட் போன்ற விலக்கு அளிக்கப்பட்டவற்றையும், ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவது குறித்து அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே பொருட்களை எடுத்துச் செல்லும்போது, 'இ - வே பில்' கொண்டு செல்வது, வரும் பிப்., 1 முதல் கட்டாயமாகிறது. இதன் மூலம், வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்செய்வதைஎளிமையாக்குவது குறித்து, 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இயக்குநர் குழுத் தலைவர், நந்தன் நிலகேனி விளக்கம் அளித்தார்; அது குறித்து விவாதிக்கப்படும்.முதல் காலாண்டு, ஜி.எஸ்.டி., வசூல், 1,307 கோடி ரூபாயாக உள்ளது. நேரடி வரி வசூல் திட்டமிட்ட இலக்கை மிஞ்சி, 18.7 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தவிடுக்கான வரி நீக்கம்!

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதம் திருத்தப்பட்ட பொருட்கள்:

*28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு: பழைய, பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகன விற்பனை. பயோ எரிபொருளில் இயக்கப்படும் பொது பயன்பாட்டுக்கான பஸ்
*18ல் இருந்து 12 சதவீதமாக குறைப்பு: சர்க்கரையால் செய்யப்பட்ட சாக்லேட், பயோ - டீசல், 20 லிட்டர் தண்ணீர் கேன், சொட்டு நீர் பாசன அமைப்புகள், மெக்கானிக்கல் ஸ்பேயர்கள், உரங்களுக்கான பாஸ்பரிக் ஆசிட், சில இயற்கை உரங்கள்
* 18ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு: தனியார் நிறுவனங்களின் சமையல் காஸ், மெகந்தி கோன், செயற்கைகோள் மற்றும் ராக்கெட்களுக்கு தேவையான உதிரி பாகங்கள்- தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்டவை
* 12ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு: வெல்வெட் ஆடைகள்

* 5 சதவீதத்தில் இருந்து முழு விலக்கு: அரிசி தவிடு
* 3ல் இருந்து 0.25 சதவீதமாக குறைப்பு : வைரம் மற்றும் விலையுயர்ந்த கற்கள்
* 12ல் இருந்து 18 சதவீதமாக உயர்வு : சிகரெட்டுக்கான பில்டர்
அலுமினிய பாத்திரங்களுக்கு வரியை குறைக்க வலியுறுத்தல்

'அலுமினிய பாத்திரங்கள் மீதான வரியை, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்' என ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:களை கண்டறிந்துள்ளது. அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும். இம்முறை 29 பொருட்கள் மீது வரி குறைக்கப்பட்டுள்ளது.
விபூதி, எண்ணெய் எடுக்கப்பட்ட அரிசி தவிடு, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள், 20 லிட்டர் கொள்ளளவு உடைய கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், சர்க்கரை மிட்டாய்கள், நுண் ஊட்ட சத்துக்கள், கேளிக்கை பூங்காக்கள், தண்ணீர் பூங்காக்கள், தோல் பொருட்கள், காலணிகள் போன்றவற்றுக்கு வரி குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முன்வைத்து நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.அலுமினிய பாத்திரங்கள் மீதான வரியை, 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகவும்; அலுமினிய மூலப்பொருட்கள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாகவும் குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


இதைத் தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது; இது, வரும், 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட் போன்ற விலக்கு அளிக்கப்பட்டவற்றையும், 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...