'கடலோர கவிதைகள்' படத்தில் இடம் பெற்ற "கொடியிலே மல்லிகைப்பூ" பாடலை அனேகமாக 1000 முறையாவது கேட்டிருப்போம், அப்படி இந்த பாடலில் என்ன பிடித்திருக்கிறது என்று கேட்டால்? சிலர் வரிகளை சொல்வோம், சிலர் பாடகர்களை சொல்வோம், ஒரு சிலர் ராஜாவின் இசை என்று பொத்தம்பொதுவாக சொல்வோம், ஆனால் இந்த பாடல் மட்டுமன்றி இதுபோல் எண்ணற்ற பாடல்கள் உண்டு. ராஜாவின் பாடலாகட்டும் அல்லது பின்னணி இசையாகட்டும், அதில் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை பிரதானமாக பயன்படுத்துவார். அது எந்த கருவி என்று பிறகு பார்ப்போம்...
ஒரு படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சியில் முதன்முறையாக வெளியாகும்போது, அந்த படத்திற்கு இசை என்று பெயர் வரும் முன்னமே ராஜாதான் இசை என்று சொல்லிவிடும் ஆற்றல் அனேகமாக ராஜாவின் ரசிகர்களுக்கு தான் உண்டு என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை, காரணம் ஆகச்சிறந்த காட்சிகளில் இந்த இசைக்கருவி மட்டுமே பிரதானமாக, விண்ணை நோக்கி வரும் விருட்சத்தை போல வீரிட்டு வரும்...
சரி விஷயத்திற்கு வருகிறேன்...
கொடியிலே மல்லிகப்பூ மனக்குதே மானே பாடலில் இரண்டாவது இடையிசையை கேட்டுப்பாருங்கள், அதில் இடம்பெற்றிருக்கும் இசைக்கருவி என்னவென்று கேட்டால் வயலின் என்றே சொல்லக்கூடும், ஆனால் அது வயலின் அல்ல, வயலின் குடும்பத்தை சார்ந்த கருவி, அதன் பெயர் செல்லோ, இந்த கருவியை எந்தந்த பாடலின் ராஜா பயன்படுத்தி இருக்கிறார் என்று ஒரு சில பாடலை சொல்கிறேன்...
1 காதல் ஓவியம் பாடும் காவியம் பாட்டில் வரும் 3ஆவது பின்னணி இசை.
2 ஆனந்த ராகம் என்ற பாட்டு உமாரமணன் பாடியது.
3 எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் பாட்டு.
4 புத்தம் புது காலை என்ற பாடலில் வரும் 3ஆவது பின்னணி இசையில் வயலின் உடன் சேர்ந்து வரும்.
2 ஆனந்த ராகம் என்ற பாட்டு உமாரமணன் பாடியது.
3 எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் பாட்டு.
4 புத்தம் புது காலை என்ற பாடலில் வரும் 3ஆவது பின்னணி இசையில் வயலின் உடன் சேர்ந்து வரும்.
'பிதாமகன்' படத்தில் விக்ரம் "குதிரையை நடத்தி செல்லும் காட்சியில்" பின்னணி இசையில் வருவதும் செல்லோ தான், அதே போல் 'நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ஆர்யா குளித்துவிட்டு "தலைக்கீழாக நின்று கொண்டு தன் இரு கால்களில் வணக்கம் செய்யும் ஆசனத்தின் பின்னணிக்கூட செல்லோவினுடையது தான். இது உதாரணத்திற்கு மட்டுமே கொடுத்துள்ளேனே தவிர ராஜாவின் அனேக படங்களில் பின்னணி இசையாக இந்த கருவியை உபயோகித்திருப்பார். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் வயலின் மென்மையாக இசையைக்கொடுக்கும், வயலினை விட 3 மடங்கு பெரிதாகவும், அதே சமயத்தில் கனமாக இசைக்கொடுப்பது செல்லோ தான்..
சரி கருவியை புரிந்துகொண்டோம், இதில் செல்லோ விற்பன்னர் ஒருவர் ராஜாவின் இசைக்குழுவில் இருப்பாரல்லவா ? அவர் யார் ? அவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டாமா ?
செல்லோ வாசிப்பதில் விற்பன்னர் திரு.சேகர் ராமச்சந்திரா அவர்கள். இவரது இசைப்பயணம் தொடங்கியது 1976 வருடம். முதன்முதலாக இவர் பதின்ம வயதில் வாசித்தது திரு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்குத்தான். பிறகு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களுக்கு வாசிக்கும்பொழுது அதே இசைக்குழு தான் இளையராஜா இருந்தததால் அதன் காரணமாக ராஜாவுக்கும் வாசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
ராஜாவிற்கு இவர் வாசித்த முதல் படம் 'பொண்ணு ஊருக்கு புதுசு'. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களுக்கு வாசிக்க நேர்ந்தது.
சரி சேகர் ராமச்சந்திரா அவர்களின் பின்புலம் என்ன ? பார்ப்பதற்கு, வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்தியநாதன் போல தோற்றமளிக்கிறாரே என்று உங்களுக்கு கேள்வி எழுகிறதென்றால் அதன் விடையும் நீங்கள் நினைத்தது தான்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் மகன் தான் இவர்.
No comments:
Post a Comment