தினகரன் சொல்லி தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டதாக அவரது ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் கூறியுள்ளார்.
வழக்கு தானே...
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட சொன்னது தினகரன் தான். அப்போது வெற்றிவேல் கூட தயங்கினார். ஆனால், நான் தான் வெளியிடுங்கள். வழக்கு தானே போடுவார்கள். பார்த்து கொள்ளலாம் எனக்கூறினேன். அதன்படியே அவரும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார்.
ரூ.20 டோக்கன்
ஆர்கே நகர் தேர்தலில் 2.5 லட்சம் வாக்காளர்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் அதிமுகவினர் பணம் கொடுத்து விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது. இதனால், நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பணம் கண்டிப்பாக கிடைக்கும் எனக்கூறினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இவ்வாறு அவர் பேசினார். ஆனால், இதனை தினகரன் மறுத்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை சசிகலா மற்றும் தினகரன் அனுமதி பெறாமல் வெளியிடுவதாக வெற்றிவேல் கூறினார். தனது அனுமதி பெறாமலேயே வீடியோ வெளியிடப்பட்டுவிட்டதாக தினகரனும் கூறியிருந்தார். இந்நிலையில், ராஜசேகரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment