காவல்நிலையத்தில் நீங்கள் அளிக்கும் புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுத்தால்…
காவல்நிலையத்தில் நீங்கள் அளிக்கும் புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுத்தால் ( If they refuse your Complaint at Local Police Station…???? )
பொது பிரச்சனை தொடர்பாகவோ அல்லது தனி மனித பிரச்சனை தொடர்பாகவோ
உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவ ர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் (District Police Superintendent) அ்வர்களிடம் அதுபற்றிய புகா ரினை (ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் (Register Post with Acknowledge Card)மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதி காரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் (The Petitioner) ஏற்படுத்தமு டியும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் (District Police Superintendent) நமது புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னசெய்வது?
இதுபோன்ற சூழ்நிலையில் நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பல னைத்தரும். இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்ஷன் (Court Direction) என்கிறார்கள்.
சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை (High Court) நாடுகி றார்கள். அது அவசியமில்லை. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை (Magistrate Court) அணுகினாலே போதுமானது. இதற்கு குற்றவிசாரணைமுறை சட்டம் (Criminal justice law), பிரிவு 482ன்கீழ் (Under Sec.482) பாதிக்கப்பட்ட மனுதாரர் (Victim Petitioner0 நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.
இப்பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவுசெய்ய அவர்களுக்கு உத்தரவிடும்படியும் , நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.
No comments:
Post a Comment