Monday, January 15, 2018

மகாலட்சுமி… விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! – ஓரரிய தகவல்

மகாலட்சுமி… விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! – ஓரரிய தகவல்

மகாலட்சுமி… விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! – ஓரரிய தகவல்
மிக புனிதமான உறவாக போற்றப்படுவது கணவன் மனைவி உறவே  ஆகும். அந்த உறவில்
இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்பொழுது, வாழ் க்கை சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாக வும் இருக்கும். அந்த வகையில் திருப்பாற் கடலி ல் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை அவர து மனைவி மகாலட்சுமி பிடித்து விடுவது போன் று, நிறைய கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப்படங்களை நாம் பார்த்திருப்போம்.
மகாவிஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதுபோல இருப்பத ற்கு என்ன காரணம் நீங்கள் யாரும் யோசித்திருப்பீர்க ளா? அதனுடைய காரணங்கள் என்ன என்று பார்ப்போ ம். மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இரு ப்பதற்கு இதுதான் காரணமாம்.
மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்ப தற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத் தே வைத்துள்ளனர். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல் வங்கள் அதிகரிக்கும் என்றும், வீட்டில் யோகம் பிறக்கும் என்றும் கூறுகி ன்றார்கள்.
ஆண்களின் முட்டி பாகம்முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்குகீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களி ன் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக கூறி யுள் ளார்கள்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள்பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்துசேரும். இதனால்தான் செல்வத் திற்கு அதிபதிகளான லட்சுமிதேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...