Monday, January 29, 2018

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

அர்ச்சுனன் ஒருமுறை உணவு உட்கொள்வதற்காக அமரும்
தருணத்தில், துரோணாச்சாரியாரின் சீடன் ஒருவன் வந்து,
"குருபிரான், விளக்கை அணைத்துவிட்டு சாப்பிடும்படி சொல்லி
அனுப்பினார்" என்றான்.

இந்த இரவு நேரத்தில் விளக்கை அணைத்துவிட்டு, எவ்வாறு
உட்கொள்வது என்று திகைத்த அர்ச்சுனனிடம், சீடன், " இது
குருபிரான் கட்டளை " என்று மீண்டும்அழுத்தமாகக் கூறிவிட்டு
அகர்ந்தான்.
Image may contain: one or more people, outdoor and nature
மனம் குழம்பிய நிலையில் மெல்ல உணவைப் பிசைந்து உண்ணத்
துவங்கினான். என்ன ஆச்சரியம்.? சில நிமிடங்களில் கையானது
இருட்டிலும் தடுமாறாமல் வாய்க்குச் சென்று கவளத்தைக் கொடுத்து
விட்டு, மீண்டும் உணவுத் தட்டுக்குச் சென்று தேவையானதை எடுத்தது.
குருபிரான் எதை விளக்க நினைத்தாரோ, அது புரிந்து விட்டது. நன்கு
பழகி விட்டால் இருட்டிலும் இலக்கை அடிக்கலாம் என்று அறிந்தான்.
மறுநாளிலிருந்து இரவிலும் வில்வித்தைப் பயிற்சியினை மேற் கொண்டான்.
நல்ல குரு நல்ல வழிகாட்டி. நல்ல மாணவன் ஆசிரயர் சொற்படி நடத்தல்.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...