ரிலையன்ஸ் ஜியோ மார்கியூ பிரீபெயிட் திட்டத்தை மாற்றியமைத்திருக்கிறது. ரூ.153 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இனி 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர் மற்றும் வெளியூர்), தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அனைத்து ஜியோ செயலிகளுக்கும் இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதன் வேலிடிட்டியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கூடுதலாக இரண்டு சாஷெட் திட்டங்களும் வழங்கப்படுகிறது. இதில் ரூ.24 விலையில் கிடைக்கும் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 20 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். இதன் வேலிடிட்டி இரண்டு நாட்கள் ஆகும்.
இதேபோன்று ரூ.54 விலையில் கிடைக்கும் மற்றொரு சாஷெட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் ஏழு நாட்களுக்கும், 70 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்ததை போன்று ஜியோ தனது மாதாந்திர திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது.
முன்னதாக ரூ.153 திட்டம் அறிவிக்கப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு 500 எம்பி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் அனைத்து திட்டங்களிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுவதால், குறிப்பிட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படும்.
மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஜியோபோன் திட்டங்கள், 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் ரூ.149 திட்டத்தை போன்றே வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.309 விலையில் மாதாந்திர திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோசினிமா செயலிகளில் உள்ள தரவுகளை நேரடியாக இணைக்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோபோன் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ரூ.1500 முன்பணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகள் நிறைவுற்றதும் திரும்ப பெற்று கொள்ள முடியும். எனினும் இதற்கென விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment