தெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று…
தெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று…
நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு
ஆச்சரியமான தகவலாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மையிலும் உண்மை
சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் ஆனால், சூரியன் ஏன் மின்னுவதில்லை என்று நீங்கள் கேட்கலாம். சூரியன், சுட்டெரிக்கும் வெப்பத்தை பூமியின் மீது பாய்ச்சுகிறது. அப்படியானால் மற்ற நட்சத்திரங்களும் அப்படித்தானே செய்ய வேண்டும்? ஏன் மின்னுகின்றன?
சூரியன் பூமிக்கு பக்கத்தில் இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் பூமியிலிருந்து மிகவு ம் தொலைவில் உள்ளன. அந்த நட்சத்திரங்கள் சூரியனைப்போலவே பூமிக்கு அருகி லிருந்தால் நம்மீது வெப்பத்தைப் பாய்ச்சியிருக்கும். சில சமயம் சாம்பலாகவும் ஆக்கியிருக்கலாம்.
நட்சத்திரங்கள் இரவில் மட்டுமே தெரியும் ரகசியம் என்ன?
பகலில் சூரிய வெளிச்சம் நம் கண்களை மறைத்துவிடுவதுதான் காரணம். நட்சத்தி ரங்கள் வெளியிடும் ஒளியும் வெப்பமும் மிக நீண்ட தொலைவைக் கடந்து வருகி ன்றன. அப்படி வரும்போது மிகச் சொற்பமான வெளிச்சமே தொடர்ச்சியாக நம்மை வந்தடைகிறது. மேலும், நம்மை வந்தடையும்முன் பூமியின் வளி மண்டலம் வழி யாக அந்த ஒளி பயணிக்கிறது. வளி மண்டலத்தில் உள்ள தூசுகள் அவ்வப்போது அந்த ஒளி பயணிக்கும் பாதையின் இடையே செல்கின்றன. எனவே நட்சத்திரங்கள் சில நேரம் நமக்குத் தெரிகின்றன. தூசு அதிகமாக இருக்கும்போது தெரிவதில்லை. இது வேகமாக மாறி மாறி நடப்பதால்தான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது.
நட்சத்திரம் எல்லா நேரமும் மின்னுவதில்லை. மேலும் சில நட்சத்திரங்கள் எப்போ துமே மின்னுவதில்லை. இதற்குக் காரணம் அவை நட்சத்திரங்கள் அல்ல, கோள்க ள். கோள்கள் மின்னுவதில்லை. அவற்றில் வெப்பமோ ஒளியோ இல்லை. நிலவை ப்போல அவை சூரிய ஒளியைப் பிரதிபலிக்க மட்டுமே செய்கின்றன.
நட்சத்திரங்கள் ஒளி வீசுவதற்குக் காரணமாக, அவற்றின் உள்ளே அப்படி என்ன தான் இருக்கிறது?
நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். இந்த மேகத்திற்கு ள் ஹைட்ரஜன் வாயு இருக்கும். வாயுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சம் கொ ஞ்சமாக இணைந்து ஒரு பெரிய வாயுக் கூட்டமாக மாறிவிடுகின்றன. அதன் அளவு கூடும்போது வெப்பமும் கூடுகிறது. அது ஒரு வெடிகுண்டைப்போல வெடிக்கும் வரை சேர்ந்துகொண்டே இருக்கும். இப்படி வெடிக்கும்போது, எரியும் தன்மை கொ ண்ட ஹீலியம் வாயு வெளியிடப்படும். ஹீலியம், நட்சத்திரத்தின் எரிபொருளாகித் தொடர்ந்து எரிய வழிவகுக்கும். இப்படித்தான் நட்சத்திரங்கள் பிறக்கின்றன.
பெரிய நட்சத்திரங்கள் அதிவேகமாக எரிகின்றன. பிறகு மிகப் பெரிய அளவில் வெடிக்கின்றன. ஹீலியத்தைக் கக்கி மேலும் எரிகின்றன. அதேநேரம் பெரிய, பிரகா சமான நட்சத்திரங்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஏனென்றால் அவை எரி பொருளை வேகமாகத் தீர்த்துவிடுகின்றன. சிறிய, அதிகப் பிரகாசமில்லாத நட்சத்தி ரங்கள் பெரிய நட்சத்திரங்களைவிட நூறுமடங்கு அதிக காலம் நீடித்து இருக்கின்ற ன.
No comments:
Post a Comment