கொட்டித் தீர்க்கப்போகும் தென்மேற்கு பருவமழை… இந்த வருஷம் முன்கூட்டியே தொடங்கும்....காலையிலேயே கிடைத்த நல்ல செய்தி….
தமிழகத்தில் மே மாதம் இறுதியிலோ அல்லது ஜுன் முதல் வாரத்திலோ வழக்கமாக தென் மேற்கு பருவ மழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என்றும், அதுவும் மழை கொட்டித் தீர்க்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நல்ல செய்தியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. ஆனாலும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது கோடை மழை என்றாலும், தமிழக விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் எதிர்பார்த்திருப்பது தென் மேற்கு பருவ மழைதான்.
தென் மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை மே மாதம் இறுதியிலோ அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்திலேயோ அந்தமான் தீவுப் பகுதியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வரும் 19 அல்லது 20 ஆம் தேதி அந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 10 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கும். அந்தமானில் வரும் 19 அல்லது 20ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
கேரளாவில் வரும் 22ஆம் தேதி மழை தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி பகுதிகளில் 23ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் வெப்பச் சலன மழை பெய்யும். வரும் 12ஆம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னையில் வரும் 14ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்யும்.
கடந்த ஆண்டைப் போல் அல்லாமல், நடப்பாண்டில் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போல் அல்லாமல், நடப்பாண்டில் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment