அன்பர்களே தற்பொழுது பேஷன் கருதி அல்லது நம்மை கவர அல்லது வியாபார தந்திரமாக வேஷ்டி புடவை தயாரிப்பாளர்கள் அகல கரையில் பெருமாளின் அபயங்களான சங்கு சக்கரத்துடன் திருமண் காப்புடன் கூடிய வஸ்திரங்களை யும் சில தெய்வங்களின் உருவம் பதித்து சில ஆண்டுகளாக விற்கிறார்கள்.
தயவு செய்து அதனை உங்களுக்காகவோ அல்லது 60-80 என அப்த பூர்த்தி கொண்டாடுபவர் களுக்கோ அல்லது வைதீக கர்மாக்களுக்கோ வாங்காதீர்..
அப்படியே வாங்கினால் அதை பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள் இல்லை விசேஶ தினதில் பூஜையில் வைப்பதற்கும் இல்லை ( இதை சில இடங்களில் அர்சகரே உபயோகிப்பார் அல்லது ஏலம் விடுவர் அங்கும் மனிதர்கள் தான் உபயோகிப்பர் - எனவே வாங்குவதை முற்றிலும் தவிர்பது நல்லது.
ஏனெனில் பெருமாளின் அம்சங்களையும் நம் தெய்வ அம்பிகையே நமது ஆசாரியன் பஞ்சசம்ஸ்காரம் செய்யும் போது இரண்டு புஜங்களிலும் பதிப்பார் இதன் பின் நமக்கு பண்ணிரண்டு இடங்களில் ஊர்த்தவபுண்டரம் என்னும் திருமண்காப்பை இடுவார்
மேலே சொன்ன அந்த சங்கு சக்ர அம்சம் இரண்டு புஜங்களில் மட்டுமே இருக்கவேண்டும்
பண்ணிரண்டு ஊர்த்தவபுண்டரங்களும் நமது நாபிகமலத்துக்கு (வயிற்றுக்கு) கீழே வரகூடாது
ஏனெனில் அதற்க்கு கீழ்தான் பகவான் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் பாதையை படைத்துள்ளான்
ஏனெனில் அதற்க்கு கீழ்தான் பகவான் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் பாதையை படைத்துள்ளான்
மறந்தும் அந்த இடங்களில் அவனது அங்கமான சங்கு சக்கரத்தையோ அல்லது ஊர்த்தவபுண்டரங்களையோ இட்டுகொள்வதோ இல்லது அதனை வேறுவிதமாக அணிந்து கொள்வது என்பது அந்த பகவானையும் அவனது பக்தனையும் அவமதிக்கும் ஒரு பகவத்பாகவத அபசாரமாகும்.ஷ...ரு🌴🌷
அப்படிபட்ட அபசாரங்களை நமது ஶ்ரீவைஷ்ணவர்கள் செய்வது மன்னிக்கவே முடியாத ஒரு பாவச்செயல்.
எனவே அவர்கள் விற்கிறார்கள் என்பதற்காக வாங்கி அபசாரபடாதீர்கள்-
நீங்கள் அதனை வாங்காவிட்டால் தயாரிக்கமாட்டார்கள்
அதன் மூலம் துணிவியாபாரிகள் நெய்பவர்கள் ஆகியோர் தமது பகவத் அம்சத்தை அல்லது நமது ஊர்த்வபுண்டரத்தை அவமானபடுத்த தூண்டுவதும் ஒழுந்து போகும் செய்வோமா ஶ்ரீவைஷ்ணவ அன்பர்களே?ஷ...ரு🐝🐝
No comments:
Post a Comment