நீங்கள் தெருவில் நடந்து போகும் போது லேசாக தலை சுற்றி கீழே விளவே தெரு முனையில் உள்ள மளிகை கடைக்காரர் ஓடிவந்து சோடா குடுத்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல
நீங்கள் குடும்பத்துடன் வாகனத்தில் வெளியே செல்லும் போது எரிபொருள் இல்லாமல் வாகனம் இடையில் நிர்க்க எதிர் வரும் பழக்கடை அண்ணாச்சி மாப்ள என் வண்டி நீங்க எடுத்துக்கங்க நான் பெட்ரோல் போட்டு எடுத்திட்டு போரேன் என்று சொல்ல
குழந்தைக்கு ஸ்கூல்க்கு பணம் காட்டவேண்டிய தேதி முடிந்து. கண் விழி பிதுங்கி நிர்க்கும் போது நண்பன் போன் கடையில் இருந்து ஒரு அழைப்பு மச்சான் இந்த கார்ட்டு இதுல கொஞ்சம் பணம் இருக்கு எடுத்து பீஸ் கட்டு என்று சொல்ல
வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை பணம் இருப்பவர்களுக்கு அது கொண்டாட்டம் இல்லாதவர்களுக்கு அது திண்டாட்டம். பணம் இல்லாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கும்போது என் நிலமை அறிந்த பக்கத்து துணிக்கடை நண்பர் வாங்க பாய் வேணும்ங்கிறத எடுத்துக்கங்க அப்புறம் பணம் கொடுங்கள் என்று சொல்ல
இப்படி தினமும் அன்பின் உறவுகளாக வாழும் மனிதர்களை விட்டு விட்டு எங்கோ இருந்து கொண்டு இந்திய மக்களையும் இந்திய பொருளாதாரத்தையும் அழிக்கும் ஆன் லைன் வணிகத்திற்கு ஆதரவு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் கனவான்களே.
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ஆன் லைன் பொருள்களாலும் ஒரு சிறு வியாபாரி சாகடிக்கப்படுகிறான் என்பதை எப்போது நீங்கள் உணர போகிறார்கள்
உங்கள் பொருளாதாரத்தை அன்னியனுக்கு கொடுத்து விட்டு இந்தியா வாழ்க என்று கோசம் இடுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை
எனி எந்த பொருள் வாங்கினாளும் அருகில் உள்ள அல்லது தெரிந்த நண்பர்களிடம் வாங்குங்கள்
ஆன் லைன் தொழிலை புறக்கணிப்போம் நல்ல உறவுகளை பேணிக் காப்போம்
கனத்த இதயத்துடன்
கடை வைத்து நடத்தும் அனைத்து வியாபாரிகள்.
கடை வைத்து நடத்தும் அனைத்து வியாபாரிகள்.
No comments:
Post a Comment