நான் புடவை வாங்கறதுக்கு ஒரு துணிக்கடைக்கு போறேன். என் முன்னாலே மூணு புடவையை போடறாங்க. முதல் புடவை கலர் பிடிச்சிருக்கு; ஆனா விலை எனக்குக் கட்டுப்படி ஆகல. ரெண்டாவது புடவையின் விலை சரிதான்; ஆனா டிசைன் பிடிக்கல. மூணாவது புடவையோட விலையும், டிசைனும் ஓ.கே. ஆனா கலர் பிடிக்கல. இப்ப நான் என்ன செய்யறேன்? கடைக்காரர் கிட்டே ஒரு ஆர்டர் கொடுக்கறேன். எனக்கு முதல் புடவை கலர்ல, ரெண்டாவது புடவையோட விலையில, மூணாவது புடவையோட டிசைன்ல ஒரு புடவை நெய்து கொடுங்கன்னு கேட்டுக்கறேன். அதே மாதிரி தயார் செஞ்சி கொடுக்கறாங்க. அதுக்குப் பேருதான் Designer Saree. அதாவது எனக்காகவே தயார் செய்யப்பட்ட புடவை. அந்த புடவை designed exclusively for me. வேற யாருக்கும் அது மாதிரி கிடைக்காது. இல்லையா? ஆனா இப்ப என்ன நடக்குது? கடைக்கு போய் எனக்கு Designer Saree வேணும். காட்டுங்கன்னு கேட்கறாங்க. அப்பிடி சொல்லி கேட்கறது சரியா? கல்யாணத்தும் போது பாருங்க. இந்த பேச்சு அடிக்கடி காதுல விழும். "என்ன புடவைடி வாங்கிண்ட ?" "டிசைனர் புடவைதாண்டி வாங்கினேன்." இதை கேட்கும் போதே எனக்கு எரிச்சல் வரும். அதெப்படி ஒரு டிசைனர் புடவை ரெடியா கடையில கிடைக்கும்? டிசைன் பண்ணித்தானே தரணும்? நம்ப ஜனங்க எதையும் யோசிக்கறதே இல்லை. (முறைக்காதீங்க. ஏதோ எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன்) .
நல்ல வேளை நான் புடவை கட்டுவதில்லை... நமக்கு இந்த பஞ்சாயத்தே கிடையாது.. ஹிஹி
நல்ல வேளை நான் புடவை கட்டுவதில்லை... நமக்கு இந்த பஞ்சாயத்தே கிடையாது.. ஹிஹி
No comments:
Post a Comment