திரு. ஐசரிவேலன் அவர்களை மக்கள் திலகம் ரிக்ஷாக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு தொடர்ந்து பெரும்பாலான எம்ஜிஆர் படங்களிலும் வேறு படங்களிலும் நடித்தார்.
ஒருமுறை எம்ஜிஆரிடம் ஐசரி, அண்ணே! எனக்கு சம்பளத்தை கொஞ்சம் கூட்டிக் கொடுக்கச் சொல்லுங்க! குடும்ப சிலவை சமாளிக்க முடியல என்றார். ஏற்கனவே எம்ஜிஆர் படங்களில் நடிக்கும் அனைவருக்குமே மற்ற படங்களில் நடிப்பதை விட அதிக தொகையே கிடைக்கும். இதை எம்ஜிஆர் உணராமல் இருப்பாரா!
அதுவும் ஐசரி, எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மற்றும் அண்ணா திமுகவின் ஆரம்ப கால உறுப்பினர். ஆனால் அடுத்தவர் தலையில் மிளகாய் அரைப்பதை எப்போதுமே எம்ஜிஆர் விரும்பமாட்டார்.
அவர் பொறுமையாக ஐசரியிடம் கூறிய அறிவுரை: தம்பி! நீ இந்த வருடம் நடித்த மொத்த படங்கள் எத்தனை? அதற்கு வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு? உனது குடும்ப சிலவினங்கள் வருடம் முழுவதும் எவ்வளவு? என அடுக்கடுக்காக வினவினார். கூட்டிக்கழித்து பார்த்ததில் அவருடைய வருட தேவைக்கு அதிகமாகவே வருமானம் வந்திருந்தது.
இதைக்குறிப்பிட்ட தலைவர் இனி குடும்ப சிலவிற்கு போதவில்லை என்று சொல்லாதே! கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்த பழகிக்கொள் என்று அன்புடன் கூறினார். ஐசரியும் அதிலுள்ள நியாயத்தை புரிந்து பின்னர் அதன்படியே நடந்தார்.

பிறகு எம்ஜிஆர் 1977ல் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட சென்னை ஆர்.கே.நகரில் வாய்ப்பும் கொடுத்தார். அண்ணா திமுக சார்பில் சென்னையில் வென்ற முதல் சட்ட மன்ற உறுப்பினர் ஐசரி வேலன்தான்.
மேலும், இணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான "பார்லிமெண்ட் செகரட்டரி" பதவியும் அளித்து கவுரவப்படுத்தினார் தலைவர்!
மேலும், இணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான "பார்லிமெண்ட் செகரட்டரி" பதவியும் அளித்து கவுரவப்படுத்தினார் தலைவர்!
இனிய காலை வணக்கத்துடன் சந்தானம் அதிமுக...
No comments:
Post a Comment