சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் சமையலில் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்கள். பச்சை மிளகாயில் உடல் நலத்தை மேம்படுத்தும் விஷயங்கள் உள்ளன.
அதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை நோய்களுக்கு எதிராகவும், விரைவாக நோயை குணப்படுத்தவும் துணைபுரியும். சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
வெட்டுக்காயத்தால் அவதிப்படுபவர்களும் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சக்தியை அது வழங்கும்.
மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சைமிளகாய்க்கு இருக்கிறது. வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது
No comments:
Post a Comment